Aran Sei

இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் – நிகழ்ச்சியை ரத்து செய்த நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃபரூக்கி

ந்துத்துவ அமைப்புகள் விடுத்த மிரட்டல் காரணமாக தன்னுடைய மும்பை நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறார் பிரபல மேடை நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃபரூக்கி.

சமீபத்தில் ஆஷ்ரம் 3 எனும் தொடரின் படப்பிடிப்பு தளத்தில் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தல், அதே பாணியில், திட்டமிட்டபடி ஃபரூக்கியின் மேடை நிகழ்ச்சி நடந்தால், அந்த அரங்கத்தையே எரித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து இருந்தது.

சமூக வலைதளங்களில் பரூக்கிக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரங்களை  கட்டமை#BajrangDalத்து வருகிற பஜ்ரங்தல் அமைப்பினர், இனி எப்போதும் அவரின் நிகழ்ச்சிகளை  நடத்த காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி வருகிறார்கள்.

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது – எஸ்.டி.பி.ஐ.

இந்த நிலையில் மும்பையில் அவர் நடத்துவதாக இருந்த மூன்று நிகழ்ச்சிகளுக்கும் வெளிப்படையான மிரட்டலை அவ்வமைப்பு செய்ததன் காரணமாக நேற்று மாலை (27/10/21) தன்னுடைய மூன்று நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக  அறிவித்துள்ளார் ஃபரூக்கி.

தன்னுடைய டுவிட்டர் இணையதளத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், “மும்பையில் வருகிற 29, 30, 31 ம் தேதிகளில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன; பார்வையாளர்களின் பாதுகாப்பு எல்லாவற்றையும் விட எனக்கு மிக முக்கியமானது; நான் இப்போது எத்தகைய (மன உளைச்சல்) சூழலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறேனோ, அதே நிலை என்னுடைய பார்வையாளர்களுக்கும் வருவதை நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

ஃபரூக்கி கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து இந்துத்துவ சக்திகளால் குறி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்  பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஒருவரின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  மேடை நிகழ்ச்சியில் இந்து தெய்வங்களை இழிவு படுத்தியதாக கைது செய்யப்பட்டவர் ஃபரூக்கி.

திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்

ஆனால் அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் அன்றைக்கு நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே பரூக்கி கைது செய்யப்பட்டு விட்டார் என்று தெரிவித்தனர். இந்தூர் காவல்துறையினர் இந்து தெய்வங்களை மேடையில் இழிவு படுத்தியதற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் யாருமில்லை என்று தெரிவித்தபோதும் வழக்குப்பதிவு செய்தனர். மத்திய பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றம் அவருக்கு பிணை மறுத்தால், உச்சநீதிமன்றத்திற்கு போய் பிணை வாங்கினார் ஃபரூக்கி.

இந்த சூழலில் தான் அக்டோபர் 29, 30, 31ஆம்  தேதிகளில் மும்பையின்  மேற்கு போரிவாலி பகுதியில் உள்ள ரங்க்சாரதா அரங்கில் ஃபரூக்கியின் நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (26/10/21) அரங்கத்தின் உரிமையாளர் பூர்ணிமா ஷாவை பஜ்ரங் தல் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சந்தித்து நேரடியான மிரட்டல் விடுத்துள்ளனர்.

“இது இந்துக்களுக்கு எதிரான நிகழ்ச்சி என்று அவர்கள் கூறினார்கள். நான் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் இருப்பதாக சொன்னபோதும் அவர்கள் என்னை தொடர்ந்து மிரட்டி, இந்த நிகழ்ச்சி நடந்தால் நிச்சயமாக அரங்கத்தையே எரித்து விடுவோம் என்று எச்சரித்தார்கள். அதனால் நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கு நாங்கள் முடிவு செய்துவிட்டோம்” என்று சொல்கிறார் பூர்ணிமா ஷா.

‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாற்ற தேவையில்லை’- கண்காணிப்புக் குழு பரிந்துரை

இதனிடையே, கொங்கன் மண்டல விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மும்பை மாநகர காவல் துறைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், இந்துசமய கடவுளர்களை இழிவு படுத்துவதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை பரூக்கி புண்படுத்துவதாக தெரிவித்துள்ளது. எனவே, இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

ட்விட்டர் இணைய தளத்திலும் திரும்பி போ முனாவர் என்கிற பொருளில் #GoBackMunawar என்கிற ஹாஷ்டேக் பரவலாக பேசுபொருள் ஆக்கப்பட்டது. இப்படியான மிரட்டல் அணுகுமுறையை பயன்படுத்திதான் கடந்த மாதம் குஜராத்தில் நடக்க இருந்த ஃபரூக்கியின் நிகழ்ச்சி ரத்து செய்ய வைக்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடந்த மாதம் மிரட்டப்பட்டு இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Source: the scroll

 

இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் – நிகழ்ச்சியை ரத்து செய்த நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃபரூக்கி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்