Aran Sei

மும்பை டாடா கல்லூரி: தடையை மீறி மடிக்கணினி, செல்போனில் மோடி – பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்கள் – பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி எதிர்ப்பு

மோடி – பிபிசி ஆவணப்படத்தை கல்லூரியில் திரையிடக் கூடாது என மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்லூரி தடை செய்திருந்த போதிலும், தடையை மீறி மாணவர்கள் கல்லூரிக்குள் மடிக்கணினி, செல்போனில் ஆவணப்படம் பார்த்துள்ளது பரபரபபி ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டிருந்த ஆவணப்படத்தை ஒன்றிய அரசு இந்தியாவில் தடை செய்துள்ளது. பேஸ்புக், ட்விட்டரில் வெளியான இந்த ஆவணப்படத்தை ஒன்றிய அரசு அகற்றிவிட்டது. ஆனாலும் நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவருகின்றனர். அவர்களுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

இந்தியாவின் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளை அடிக்கிறது – அதானி குழும விளக்கத்துக்கு ஹிண்டன்பர்க் பதிலடி

இந்நிலையில், மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்லூரியில் மாணவர்கள் சர்ச்சைக்குரிய மோடியின் பிபிசி ஆவணப்படத்தை ஒரே இடத்தில் கூடிப் பார்க்கப்போவதாகத் தெரிவித்திருந்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம், `இந்தப் படத்தை ஒரே இடத்தில் ஒட்டுமொத்தமாக கூடி பார்க்கவேண்டாம்’ என்று எச்சரிக்கை செய்திருந்தது.

ஆனால், மாணவர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி உட்பட பாஜகவினர் சிலர் பிபிசி படத்தை ஒரே இடத்தில் கூடிப் பார்க்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரிக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம், `ஒரே இடத்தில் கூடி பிபிசி-யின் சர்ச்சைக்குரிய படத்தைப் பார்க்க அனுமதிக்கமாட்டோம்’ என்று காவல்துறையினர் சொன்னதால், பாஜகவினர் கலைந்து சென்றனர்.

அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

கல்லூரி நிர்வாகமும் ஒரே நாளில் இரண்டு முறை மாணவர்களிடம் சர்ச்சைக்குரிய படத்தைப் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதோடு படத்தைப் பார்க்க திரை வசதியும் செய்துகொடுக்கப்படவில்லை. இது போன்ற செயல் கல்லூரியின் அமைதியைச் சீர்குலைக்கும் என்பதால், இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. ஆனால், அதையும் மீறி இரவு ஏழு மணிக்கு மேல் பிபிசி-யின் படத்தை மாணவர்கள் தங்களுக்குள் கியூஆர் கோடைப் பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் தங்களது மடிக்கணினி, மொபைல் போனில் பார்த்தனர்.

10 மடிக்கணினிகளில் 200 மாணவர்கள் கல்லூரியில் ஆங்காங்கே அமர்ந்து பார்த்ததாக, அதற்கு ஏற்பாடு செய்த சிவானந்தன் என்ற மாணவர் தெரிவித்திருக்கிறார். `மாணவர்கள் தங்களது தனிப்பட்ட மடிக்கணினி, மொபைல் போனில் பார்த்திருக்கலாம். ஆனால், அதைக் கண்காணிக்க முடியாது’ என்று கல்லூரி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Source : NDTV

LIC-க்கு பாடை கட்டிய அதானி | வீணாய் போன மோடியின் உழைப்பு | Aransei Roast | BJP | Modi | Adani | BBC

மும்பை டாடா கல்லூரி: தடையை மீறி மடிக்கணினி, செல்போனில் மோடி – பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்கள் – பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி எதிர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்