போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் அடிப்படையில், ஒரு குழந்தையை வெறுமனே தொடுவதை. பாலியல் தாக்குதல் என்று கூறுமுடியாது என்றும், மாறாக, பாலியல் உள்நோக்கத்துடன், தோலோடு தோல் உரசினால் மட்டுமே, அவ்வாறு கருத முடியும் என்று, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு தெரிவித்துள்ளதாக அவுட்லுக் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கண்டேவாலா இவ்வாறு கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றவாளியைத் தண்டிக்கப், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியே போதும் – உச்ச நீதிமன்றம்
கொய்யா பழம் தருவதாக கூறி, குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஒருவர், தன் ஆடைகளை களைந்ததாகவும், மார்பகத்தை அழுத்தியதாகவும், அந்த குழந்தை தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேல் ஆடையை கழற்றாமல், குழந்தையின் மார்பகத்தை தொடுவது, போக்சோ சட்டத்தின் பிரிவு 7ன் படி குற்றமா என்பது குறித்து ஆராய்ந்ததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின் பிரிவு 7ல், குழந்தையின் அந்தரங்க பாகங்களை தொடுவது அல்லது, ஒருவர் குழந்தையை தன்னுடைய அந்தரங்க பாகங்களைத் தொடச் செய்வது அல்லது பாலியல் நோக்கத்துடன், உடல்ரீதியான தொடர்பை ஏற்படுத்துவது, பாலியல் தாக்குதல் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், “அந்த நபர் மேலாடையை கழற்றி கையை வைத்தாரா, அல்லது கையை ஆடைக்குள் விட்டு, மார்பகத்தை அழுத்தினாரா என்பது தொடர்பாக குறிப்பான தகவல் இல்லாமல், இதை பாலியல் தாக்குதல் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது” என்று நீதிபதி தெரிவித்துள்ளதாக தி வயர் கூறுகின்றது.
டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆகவே, போக்சோ சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்த நீதிபதி புஷ்பா கண்டேவாலா, பலவந்தமா, பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டதாக, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354ன் படி அவருக்கு தண்டனையை உறுதி செய்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின் பிரிவு 7ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். அதுவே, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
—
அன்றாடம், சமூகத்தில் நிகழும் அனைத்துபிரச்சனைகளுக்கும் பின்னாள் உள்ள அரசியலை முழுமையாக புரிந்துகொள்ள, அரண்செய் யூடியூப் சேனலை பின் தொடருங்கள் என அன்போடு அழைக்கிறோம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.