Aran Sei

பீமா கோரேகான் வழக்கு: வீட்டுக் காவலுக்கு மாற்றக் கோரிய பத்திரிகையாளர் கவுதம் நவ்லகாவின் மனு – தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்

லோஜா மத்திய சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றக் கோரி சமூகச் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவுதம் நவ்லகா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 70 வயதான  கவுதம் நவ்லகாவின் மனுவை நீதிபதிகள் எஸ்.பி.சுக்ரே, ஜி.ஏ.சனப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

பீமா கோரேகான் வழக்கில், செயல்பாட்டாளர் கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் மறுப்பு – மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கவுதமின் உடல்நலக்குறைவு,  சிறையில் உள்ள மோசமான சுகாதார நிலைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் வீட்டுக் காவலில் வைக்க அனுமதி கோரியுள்ளார். அவர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

“மனுதாரர் சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (NIA)  நீதிமன்றத்தின் தலைமை அதிகாரியின் கீழ் இருப்பார். அவர் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு மதிப்பளித்து, சட்டத்தின் அளவுகோல்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்வதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகாரிகளுக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மனுதாரருக்கு மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்யுமாறு சிறை கண்காணிப்பாளருக்கு  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கைதிகளை ஒடுக்குவதில் பாஜக, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்துள்ளன – ஆலன் ஷுஐப் 

பிரபல எழுத்தாளரும் நகைச்சுவையாளருமான பிஜி வோட்ஹவுஸ் எழுதிய புத்தகத்தை ஏன் மறுத்தீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு அதிகாரிகள்  பதிலளித்துள்ளனர். கொரோனா தொற்று பரவுகின்ற காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிறை நிர்வாகம் எடுத்ததால்தான் புத்தகம் மறுக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வழக்கை விசாரிக்கும் என்ஐஏ சார்பில் ஆஜரான அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் அனில் சிங்,  “அவரின் பிணை மனு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், அவரது மருத்துவ பிணையும் நிராகரிக்கப்பட்டது. பிணைஅல்லது அவரது விடுதலைக்கான நான்காவது விண்ணப்பம் இதுவாகும். இந்த விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டால், உயர்நீதிமன்றம் இதுபோன்ற கோரிக்கைகளால் நிரம்பி வழியும் என்று அனில் சிங் வாதிட்டுள்ளார்.

Source: thehindu

வாஜ்பாயை திமுக ஆதரித்தது ஏன்? துரைமுருகன் விளக்கம்

பீமா கோரேகான் வழக்கு: வீட்டுக் காவலுக்கு மாற்றக் கோரிய பத்திரிகையாளர் கவுதம் நவ்லகாவின் மனு – தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்