காஷ்மீரில் அரசு அதிகாரியான காஷ்மீரி பண்டிட் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு இனப்படுகொலை குறித்து பேசுவதை விட திரைப்படம்(தி காஷ்மீர் ஃபைல்ஸ்) குறித்து பேசுவது முக்கியமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2010-11 ஆண்டில் புலம்பெயர்ந்தவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் எழுத்தராக வேலை கிடைக்கப் பெற்ற ராகுல் பட், மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள சதுரா நகரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பயங்கரவாதிகளால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பண்டிட்களை விட இஸ்லாமியர்களே அதிகம் – கேரளா காங்கிரஸ் ட்வீட்
கொல்லப்பட்ட அரசு அதிகாரியின் மனைவியின் காணொளியை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காஷ்மீர் மக்களின் பாதுகாப்பிற்கு பொற்ப்பேற்று காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துமாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
“காஷ்மீர் பண்டிட்களின் இனப்படுகொலை குறித்து பேசுவதை விட, பிரதமர் மோடிக்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து பேசுவது முக்கியம்” என்று அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் கொள்கைகளால் இன்று காஷ்மீரில் பயங்கரவாதம் உச்சத்தில் உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Source: NDTV
BJP Agenda-ஐ பரப்பும் தமிழக ஊடகங்கள் I VCK Vikraman Interview l Gurumurthy | Ponmudi I Annamalai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.