Aran Sei

‘பள்ளிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்கும் ம.பி., அரசு’ – கல்வித்துறை அமைச்சர் தகவல்

ர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான விவாதம் இப்போது, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்கு பரவியுள்ளது.

பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடைக்கு விதிக்கும் முடிவை வரவேற்றுள்ள மத்தியப் பிரதேச மாநில கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர், “மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று(பிப்பிரவரி 8), மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள இந்தர் சிங் பர்மர், “பள்ளி சீருடையில் ஹிஜாப் ஒரு பாகமல்ல. பள்ளிகளில் பொது சீருடையை (Dress Code) தீவிரமாக அமல்படுத்துவது குறித்த பணிகளில் உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

I love Hijab: ஹிஜாப் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடிய இஸ்லாமியப் பெண்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளிலும் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்படுமா என்று எழுப்பட்டுள்ள கேள்விக்கு, “இது குறித்து ஆராய்ந்து விரைவில் முடிவெடுக்கப்படும். பள்ளிகளில் பொது சீருடையை (Dress Code) அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்த, கல்வித்துறை தீவிரமாக பணி செய்து வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சரின் கருத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிஜாப் விவகாரம்: கல்லூரிகளுக்கு மூன்று நாள் விடுமுறையளித்து கர்நாடக அரசு உத்தரவு

“பள்ளிகளில் கூட பிளவை உருவாக்கும் திட்டத்தில் அரசாங்கமும் அமைச்சரும் செயல்படுகிறார்கள். தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகளின் செயல்பாடு, கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா அல்லது வகுப்புவாத பிளவு உருவாக்கும் அரசியலுக்கு முன்னுரிமை தர வேண்டுமா என்பதை அமைச்சர்தான் கூற வேண்டும்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் கூறியுள்ளார்.

Source: New Indian Express

‘பள்ளிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்கும் ம.பி., அரசு’ – கல்வித்துறை அமைச்சர் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்