ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்யும் பொழுது இஸ்லாமியர் உணவு டெலிவரி செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை கண்டித்து ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிக் பொருளாதாரத்தில் பணிபுரியும் தொழிலாளர் அமைப்பின் தலைவரான ஷேக் சலாவுதீன், ஸ்விக்கி உத்தரவின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, இத்தகைய மதவெறி கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு ஸ்விக்கி நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைவருக்கும் இங்கு வேலை பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் காலத்தில் அநீதியாக நடத்தப்படும் முறைசாரா தொழிலாளர்கள் – சிவராமன்
“கிக் தொழிலாளர்கள் மதத்தின் பெயரால் இதுபோன்ற அப்பட்டமான மதவெறியை எதிர்கொள்வதை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. கிக் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இதுபோன்ற நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுக்கும்?” என்று ஸ்விக்கியை டேக் செய்யும் போது காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
இந்த சர்ச்சைக்கு ஸ்விக்கி இன்னும் பதிலளிக்கவில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2019 ஆம் ஆண்டில், ஜொமாட்டோவில் உணவு டெலிவரி செய்ய வந்த நபர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்று தெரிந்ததும், அவர் தனது உணவு ஆர்டரை ரத்து செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Source : NDTV
பறந்து போன சாவர்க்கர் | புல்புல் பறவை பாவமில்லையா? | Aransei Roast | savarkar | RSS | BJP | Bulbul
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.