இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் தங்களின் கருத்துகளை சர்வதேச குழுக்களிடமிருந்தே பெறுகின்றனர் என்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
நேற்று(பிப்பிரவரி 8), மாநிலங்களவையில் பேசியுள்ள பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை நியமன உறுப்பினர் ராகேஷ் சின்ஹா, “பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருக்கும் சிலர் அர்பன் நக்சல் சித்தாந்தத்தைப் பரப்புரை செய்கிறார்கள். இது ஊடகங்களின் போர்வையில் நடக்கிறது” என்று கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து பேசியுள்ள ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் தங்களின் கருத்துகளை சர்வதேச குழுக்களிடமிருந்தே பெறுகின்றனர். இவர்கள்மீது நடவடிக்கைகள் எடுத்தால், சில சர்வதேச குழுக்கள் அவர்களுக்கு உதவ முன்வருகின்றன. இடதுசாரி தீவிரவாதம் ஒரு ஆபத்தான சித்தாந்தம். இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புபவர்கள் ஒருபோதும் ஆக்கபூர்வமான இந்திய பண்பாட்டைச் சேர்ந்தவராக இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
’மாவோயிஸ்ட்’ வழக்கில் ஜாமீன். போராடுவது தேச துரோகமாகாது – கேரள நீதிமன்றம்
“பிரதமர் மோடி ஏழைகளின் மீட்பராக இருக்கிறார். இடதுசாரி தீவிரவாத சித்தாந்தம் அவரது தலைமையில் குறைந்து வருகிறது. அர்பன் நக்சல் சித்தாந்தத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இடதுசாரி தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் சர்வாதிகாரத்தை கொண்டு வர விரும்புகிறார்கள்” என்று நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.