தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் வழியாகத்தான் இங்கு உயர்கல்வியில் அதிகளவிலான மாணவர்கள் சேர முடிந்தது என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சாய் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் நுழைவுத்தேர்வை ரத்து செய்ததால் தான் தமிழ்நாட்டில் 51.4 விழுக்காடு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இது இந்தியாவின் தேசிய சராசரியான 27.1 விழுக்காட்டை விட அதிகமாகும்.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு கூடவே, உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேரும் ஏராளமான மாணவர்களின் பங்களிப்பையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.
இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு மேம்படுத்தும் நோக்கத்துடன் “நான் முதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ‘நான் முதல்வன்’ திட்டம் உலகின் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source : DTnext
பாஜகவை திமுக மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.