மோர்பி பால விபத்து என்பது 53 குழந்தைகள் உட்பட 135 உயிர்களுக்கு குஜராத் கொடுத்த பரிசு என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் மோர்பி பால விபத்து தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூர்மையான கேள்விகளாலும், காரசாரமான கருத்துக்களாலும் மோர்பி தொங்கும் பாலத்தின் அனைத்து சட்ட விரோதங்களும் அம்பலமாகியுள்ளன.ஒன்றே கால் பக்க ஒப்பந்தம், டெண்டர் இல்லை, நிபந்தனைகள் இல்லை, உறுதி சான்றிதழும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். எனவே, 53 குழந்தைகள் உட்பட 135 உயிர்களுக்கு குஜராத் கொடுத்த பரிசு அது என்று கூறியுள்ளார்.
இத்தனைக்கு பிறகும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருக்கு பதவியில் இருக்க என்ன உரிமை இருக்கிறது? நினைவில் கொள்ளுங்கள், இதுவரை அவர் மன்னிப்பு கூட கேட்கவில்லை, ராஜினாமா செய்யவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்பத்துக்கு கூட வரி போடுவீங்களா? | GST தர முடியாதுனு மிரட்டும் மம்தா | Aransei Roast | BJP | GST
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.