பார்ப்பனர்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடி வேலை, அதில் மோடி இரவு காவலர், அமித்ஷா பகல் காவலர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பழங்குடி இருளர் மனித உரிமை மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய திருமாவளாவின், “இந்தியாவில் பழங்குடியினர் நூற்றுக்கு ஒரு சதவீதம் அடிப்படையில் மொத்தமாக ஏழரை கோடி பேர் இருக்கிறார்கள். இதனால் அரசியல்வாதிகள் இவர்களை கண்டு கொள்வதே இல்லை. பழங்குடியினருக்கு ஒரு பிரச்சனை என்றால் காவல்துறைகள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “சட்டம் இயற்றும் ஆட்சியாளர்கள் பலர் தலித் மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராகவே இருக்கின்றனர். அதிலும் காவல்துறையினர் இவர்கள் கொடுக்கும் புகாரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் சாதி திமிர் காக்கிச்சட்டைக்கும் வெள்ளை சட்டைக்கும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன பயங்கரவாத இயக்கங்களை உடனே தடை செய்ய வேண்டும் – திருமாவளவன்
தற்பொழுது இன்று நடைபெற்ற பழங்குடி இருளர் மனித உரிமை மாநாடு என்பது அல்ல. இது சனாதனத்துக்கு எதிரான மாநாடு, சாதி ஒழிப்பு மாநாடு, பார்ப்பனர்களுக்கு எதிரான மாநாடு, ஆர்எஸ்எஸ்க்கு எதிரான மாநாடு, மோடிக்கு எதிரான மாநாடு என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடி வேலை. அதில் மோடி இரவு காவலர், அமித்ஷா பகல் காவலர் வேலை செய்து வருகின்றனர். மோடி அமித்ஷா ஆகிய இருவரும் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் பார்ப்பனர்க்கு மட்டுமே செயல்பட்டு வாட்ச்மேன் வேலை பார்ப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
Yashwant Shinde Shocking revealations about RSS | Yashwant Shinde Affidavit on court | CBI | Haseef
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.