Aran Sei

பணக்கார நண்பர்களின் குரல் மட்டுமே மோடிக்கு கேட்கிறது; மக்களின் குரல் கேட்பதில்லை – ராகுல்காந்தி விமர்சனம்

ணக்கார நண்பர்களின் குரல் மட்டுமே பிரதமர் மோடிக்கு கேட்கிறது.  மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களுக்குத் தேவையான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்துவதில்லை. அவருடைய பணக்கார நண்பர்களின் குரலுக்கு மட்டுமே செவி சாய்க்கிறார் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பீகார்: அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு – ஒன்றிய அரசுக்கு எதிராக போராடும் இளைஞர்கள்

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அக்னிபத் திட்டத்தை இளைஞர்கள் நிராகரித்துள்ளார்கள். வேளாண் சட்டங்களை விவசாயிகள் நிராகரித்தார்கள்; பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கையைப் பொருளாதார வல்லுனர்கள் நிராகரித்தார்கள்; ஜிஎஸ்டியை வனிகர்கள் நிராகரித்தார்கள். பணக்கார நண்பர்களின் குரல் மட்டுமே பிரதமர் மோடிக்கு கேட்கிறது. மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பீகார்: ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – பாஜக எம்.எல்.ஏ மீது தாக்குதல்

முன்னதாக, அக்னிபத் திட்டம்குறித்து பேசிய அவர், இந்தியாவுக்கு இரண்டு பக்கங்களில் இருந்து அச்சுறுத்தல் நிலவும் சூழலில், அக்னிபத் திட்டம் நமது படைகளின் செயல்திறனைக் குறைக்கும். ராணுவத்தின் மாண்பு, பாரம்பரியம், வீரம் மற்றும் ஒழுக்கத்தை சமரசம் செய்யும் முயற்சிகளை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

எச்சரிக்கை I நெருங்கும் காவி இருள் I தாமதித்தால் ஆபத்து I Maruthaiyan Interview

பணக்கார நண்பர்களின் குரல் மட்டுமே மோடிக்கு கேட்கிறது; மக்களின் குரல் கேட்பதில்லை – ராகுல்காந்தி விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்