Aran Sei

‘பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம்’ – உத்தரபிரதேச அமைச்சர் குலாப் தேவி

பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம் என்று உத்தரபிரதேச அமைச்சர் குலாப் தேவி தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று உள்ளார். இதைப்போல இந்தியாவிலும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் இந்த கருத்து குறித்து உத்தரபிரதேச மேல்நிலைக்கல்வித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) குலாப் தேவியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பில்கிஸ் பானு வழக்கு: பிரதமர் மோடி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் மோடி ஒரு அவதாரத்தை போன்றவர். அசாத்திய திறமைகளை கொண்ட ஒரு மனிதர். அவருடன் யாரும் போட்டியிட முடியாது. அவர் விரும்பினால், அவர் உயிருடன் இருக்கும் வரை பிரதமராக இருக்கலாம். யூகத்தால் எதுவும் நடக்காது. அவ்வளவு அசாதாரணமான ஆளுமை அவர். கடவுள் அவரை தனது பிரதிநிதியாக அனுப்பியுள்ளார்’ என புகழாரம் சூட்டினார்.

பிரதமர் மோடியை முழு தேசமும் பின்பற்றுவதாக கூறிய குலாப் தேவி, இதைவிட பெரிய அங்கீகாரம் வேரென்ன இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source : the print

ரூபாய் நோட்டில் பிள்ளையார் படம் | நிம்மியை முந்திய காவி கெஜ்ரிவால் | Aransei Roast | BJP | AAP

‘பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம்’ – உத்தரபிரதேச அமைச்சர் குலாப் தேவி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்