Aran Sei

மன்னிப்பு கேட்க வேண்டியது மோடி தான்; இந்தியா அல்ல – தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி செயல் தலைவர் கே.டி. ராமா ராவ்

முஹம்மது நபிகள் குறித்த அவதூறு கருத்திற்கு பிரதமர் மோடி தான் மன்னிப்பு கோர வேண்டும்; இந்தியா அல்ல என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செயல் தலைவரும் அம்மாநில அமைச்சருமான கே.டி. ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மத வெறியர்கள் பேசியதற்கு ஒரு நாடாக இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் வெறுப்பை பரப்புவதற்காக பாஜக தான் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நபிகள் நாயகத்தை விமர்சித்த பாஜகவினரை சஸ்பெண்ட் செய்தால் போதாது; சட்டப்படி நடவடிக்கை வேண்டும் – மாயாவதி

“காந்தி படுகொலையை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்கூர் கொண்டாடியபோது காது கேளாதது போன்று நீங்கள் (பிரதமர் மோடி) அமைதியாக இருந்தது அதிர்ச்சியளத்தது” என்று கே.டி. ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

“நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் ஐயா; நீங்கள் எதை விளம்பரப்படுத்துகிறீர்களோ அதை தான் அனுமதிக்கிறீர்கள். மேலிருந்து வரும் மறைமுக ஆதரவுதான் மதவெறி மற்றும் வெறுப்பைத் தூண்டுகிறது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவை ஒன்றிணைக்கும் தருணம் இது – அரபு நாடுகள் கண்டனம் குறித்து ராகுல் காந்தி கருத்து

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, “இந்தியா மன்னிப்பு கேட்கவேண்டிய எந்த தவறையும் செய்யவில்லை. பாஜக செய்த தவறு. இந்தியா ஏன் ஈடு செய்ய வேண்டும். பிரதமருக்கு கத்தார் மற்றும் குவைத் நாடுகள் ராஜ தர்மத்தை நினைவுப்படுத்துகின்றன. இதை விட வெட்கக்கேடானது என்ன இருக்க முடியும்?” என்று அவர் கூறியுள்ளார்.

“பிரதமரும் அவரது கட்சியினரும் எங்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளனர்.  இந்தியா மன்னிப்பு கேட்கிறது? இங்கு எந்த இந்தியனும் தவறு செய்திருப்பதாக நாங்கள் ஏற்க மாட்டோம். அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சட்டங்களை இந்தியா மதிக்கிறது. பாஜக அதைச் செய்யவில்லை. மன்னிப்பு கேட்க வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

முஹம்மது நபி குறித்த அவதூறு கருத்து –  இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் அரசு வலியுறுத்தல்

பிரதமர் மோடி சரியான நேரத்தில் பேசியிருந்தால், நாடு அவமானப்பட்டிருக்காது. அவர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்கு, நாட்டு மக்களிடம் அவர்(மோடி)  தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, “இஸ்லாமிய வெறுப்பு” என்று வர்ணித்துள்ளன.

முஹம்மது நபி குறித்த சர்ச்சை – அரபு நாடுகளில் பாஜகவுக்கு எதிர்ப்பு

இந்திய தூதரை அழைத்து கத்தார் மற்றும் பஹ்ரைன் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன. இந்திய அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியுள்ளது.

செய்தி தொடர்பாளர்களுக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கைக்கு பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா வரவேற்பு தெரிவித்துள்ளன.

Source: NDTV

மன்னிப்பு கேட்க வேண்டியது மோடி தான்; இந்தியா அல்ல – தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி செயல் தலைவர் கே.டி. ராமா ராவ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்