காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை நேரடியாக ஆதரிப்பவர் மோடி என்று தெலுங்கானா மாநில அமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் செயல் தலைவருமான கே.டி. ராமாராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.டி. ராமாராவ், “நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினரை அச்சுறுத்தும் விதமாகவும் அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக உணரச் செய்யும் வகையிலும் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மிகவும் வெளிப்படையாக நடைபெறும் இந்த சம்பவம் குறித்து நாட்டின் பிரதமர் ஒரு கண்டனம் கூட இதுவரை தெரிவித்ததில்லை. இதற்கு அர்த்தம், அவர் இந்த சம்பவங்களை அனுமதிக்கிறார், ஆதரிக்கிறார் என்று தானே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.”
“காந்தியை கொன்ற சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை நேரடியாக ஆதரிப்பவர் மோடி. இதை சொன்னதற்காக என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. நீங்கள் (நரேந்திர மோடி) இந்த நாட்டின் பிரதமர். பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கிடையாது. இதனை கூறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது.”
தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி. ராமா ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: The New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.