Aran Sei

‘தாண்டவ்’ வெப் சீரிசை தொடர்ந்து ‘மிர்சாப்பூர்’ தொடருக்கு எதிர்ப்பு – தடை செய்ய கோரும் மனுவில் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

‘மிர்சாப்பூர்’ இணைய வழி தொடரை (Web series) வெளியிட்ட அமேசான்  நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள தொழில் நகரம் மிர்சாப்பூர். இந்த நகரத்தின் பெயரில் ஒரு தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.

எக்செல் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கரண் அன்ஷுமான், குர்மித் சிங் இயக்கத்தில் மிர்சாப்பூர் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. பங்கஜ் திரிபாதி, ஸ்வேதா திரிபாதி, திவேண்டு சர்மா, அலி ஃபசல், விக்ராந்த் மாஸ்ஸி குல்பூஷன் கர்பண்டா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த தொடர், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் பாகம் 2018  ஆம் ஆண்டு, நவம்பர் 16 அன்று வெளியானது இரண்டாம் பாகம் 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் 22 வெளியானது. மூன்றாம் பாகமும் வெளிவர இருக்கிறது.

சர்ச்சையில் சிக்கிய மீரா நாயரின் ’சூட்டபிள் பாய்’ – இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு

உத்தர பிரதேசத்தின், மிர்சாப்பூர் மாவட்டத்தில் நடைமுறையில் இருக்கும் போதைமருந்து பழக்கங்கள், துப்பாக்கி கலாச்சாரம், கொலைகள் இன்னும் பல சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து இந்த தொடர் பேசுகிறது. அங்கு உள்ள மாஃபியா கும்பல்களுக்கு இடையே நிலவும் போட்டி, அதனால் ஏற்படும் குற்றங்கள் இன்னும் பல தீவிர குற்றங்களை சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

`முஸ்லிம்களைத் தீவிரவாதியாகக் காட்டினால் வரவேற்பு; நியாயத்தைப் பேசினால் தடை’ – இயக்குநர் அரவிந்

இந்நிலையில், மிர்சாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜித் குமார் சிங், மிர்சாப்பூர் தொடரின் இரண்டாம் பாகம் வெளிவருவதற்கு தடை விதிக்க கோரி கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஓடிடி (OTT) தளங்கள் மீது தார்மீக கண்காணிப்பு : இந்திய தணிக்கை சகாப்தத்தின் சமீபத்திய நிகழ்வு

மனுதாரருக்காக ஆஜராகிய வழக்கறிஞரும் மனுதாரரின் தம்பியுமான ருத்ர விக்ரம் சிங், இந்த தொடர், மிர்சாப்பூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பையும் கலாச்சார சிறப்பையும் முற்றிலுமாக சீரழித்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மிர்சாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடியிருப்பாளரும் குண்டர்கள் எனவும், தவறான தொழில்களில் ஈடுபடுபவர்கள் எனவும் மிர்சாப்பூர் தொடர் தேசத்திற்கு முன்னாள் சித்தரித்து விட்டதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

நடிகை பார்வதி திரைப்பட சர்ச்சை – தணிக்கை குழு அதிகாரியை நீக்க கோரிக்கை

மேலும், இந்த தொடர் வெளியான பின்னர், மிர்சாப்பூரைச் சேர்ந்தவர்களை பொது மக்கள் பார்க்கும் பார்வையே  சந்தேகத்திற்குரியதாக மாறிவிட்டதாக கூறிய அவர், மிர்சாப்பூர் மக்கள் பொது சமூகத்திடையே கூனி குறுக வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். மேலும், இந்த தொடரில் நிர்வாண காட்சிகளும், மோசமான மற்றும் ஆபாசமான வார்த்தைகள்  பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்து கடவுள்களை அவமதித்த குற்றச்சாட்டு : தாண்டவ் படக்குழுவினர் மீது வழக்கு

எனவே மிர்சாப்பூரின் இரண்டாவது பாகத்தை தடை செய்ய கோரியும், ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்களுக்கு தணிக்கை குழுவை அமைத்து தணிக்கை குழுவின் சான்றிதழ் அளித்து வெளி விட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

Bad Boy Billionaires – ஹீரோக்களின் பின்னணி : ஷியாம் சுந்தர்

இந்தமனு, நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமேசான் நிறுவனத்திற்கும், எக்சல் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கும் இதுகுறித்து விளக்கம் அறிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனு தொடர்பாக, மத்திய அரசும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஓடிடி தளத்தில் வெளியான, தாண்டவ் தொடரையும் தடை செய்யக் கோரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘தாண்டவ்’ வெப் சீரிசை தொடர்ந்து ‘மிர்சாப்பூர்’ தொடருக்கு எதிர்ப்பு – தடை செய்ய கோரும் மனுவில் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்