வட சென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி காணாமல் போனது தொடர்பாக “அணில் எடுத்து சென்றுவிட்டதா” என தமிழ்நாடு பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்ததற்கு தமிழ்நாடு மின்வாரியத்துறை அமைச்சர் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இன்றைய தினம் வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மார்ச் 2௦21 வரை அந்த அனல் மின்நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என்று தமிழ்நாடு மின்வாரியத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும், இதுகுறித்து மின்நிலைய ஆவணங்களில் உள்ளதாகவும், ஆனால் நிலக்கரி இருப்பில் நிலக்கரியைக் காணவில்லை என்றும், இதுகுறித்து நடைபெற்ற முறைகேடுகுறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, சுமார் 85 கோடி மதிப்பிலான நிலக்கரி மாயம் ஆகியுள்ளதாகவும், கடந்த காலம்போல் இல்லாமல், வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம் என்றும் தமிழ்நாடு மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதேபோன்று , தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களிலும் நிலக்கரி இருப்புக்குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்விற்கு பிறகு அதன் உண்மை நிலை தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சரின் இந்தக் தகவல்குறித்து விமர்சிக்கும் வகையில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ட்விட்டரில் வெளியிட்டிருந்தப் பதிவில், “அணில் எடுத்துச் சென்றுவிட்டதா என பாருங்கள். விஞ்ஞான ஊழலின் நவீன பரிணாமம்” என்று கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில்,”அய்யா சேகரே, இது 2021 மார்ச் மாதம் வரைக்குமான கணக்கு. அப்பொழுது ஆட்சியில் இருந்தது உங்கள் கூட்டணிக் கட்சி. கருத்து சொல்லுங்கள், ஆனால் கருத்து சொல்லும் முன் கவனித்து சொல்லுங்கள்”. என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவுகள்:
இந்தியாவுடனான வணிகத்தை நிறுத்திய தாலிபான்கள் – எப்.ஐ.இ.ஒ அமைப்பு தகவல்
ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க வேண்டும் – தமிழ்நாடு அரசிடம் திருமாவளவன் கோரிக்கை
பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமான? – நிர்மலா சீதாராமன் கூறுவது சரியா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.