Aran Sei

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ‘முகக்கவசம் அணிவது கட்டாயம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முகக்கவசம் அணிவது கட்டாயமே. அதிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஏப்ரல் 20) மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவரிடம் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அவற்றிற்கு பதிலளித்துள்ள அவர், “டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல் வருகிறது. மக்கள் கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே அரசு விலக்களித்ததே அன்றி, முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நெறிமுறையிலிருந்து விலக்களிக்கவில்லை” என்று விளக்கியுள்ளார்.

உ.பி., டெல்லி, உள்ளிட்ட இடங்களில் பரவும் கொரோனா – நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

“இதுவரை ஒரு தவணை கூட கொரோனா தடுப்பூசி செலுத்தாதோர் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மாவட்டந்தோறும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் அன்றாடம் வெறும் 25 என்றளவில் இருந்து தொற்று கடந்த சில நாட்களாக 30 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது என்றும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் அந்த சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்கிடையில், டெல்லி, ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து சோதனை, சிகிச்சை, தடுப்பு மருந்துகளை வழங்கும்படி ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நெரிசலான பகுதிகளில் முககவசம் அணிவது போன்ற தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

******************                              **********************                 *******************************

ஆரியத்தை எதிர்க்கும் Yuvan Shankar Raja திராவிடன் தான்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ‘முகக்கவசம் அணிவது கட்டாயம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்