கொரனோ காலத்தில் புலம் பெயர் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்தும், அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகில் குழந்தை திருமணம் செய்யும் மூன்றில் ஒருவர் இந்தியர் – யுனிசெஃப் தகவல்
குழந்தைகள் உரிமை அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவில், கொரனோ காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , மேலும் கொரனோ காலத்தில் அவர்களது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வழிகாட்டுதல் வழங்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
வேலைக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 280% உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளும், வேலைக்காகப் புலம்பெயர்ந்துள்ள குழந்தைகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கல்வி, மருத்துவம், உணவு, அடிப்படை வசதிகள் கிட்டாத நிலையில் உள்ளது. அவர்கள் மோசமான இருப்பிடங்களிலும், சுகாதாரமற்ற இடங்களிலும் வசிக்கும் நிலையே உள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை
இந்நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்தும், அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாப்டே தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
source; THE HINDU
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.