காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி (CHRI), அப்னே ஆப் வுமேன் வேல்ட்ஒய்ட் (AAWW) ஆகிய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் உள்ள உரிமத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
சட்டங்களை மீறியதற்காகவும், வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதியை வேறு தேவைகளுக்கு மாற்றிவிட்டதாகவும் அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வருடாந்திர நிதி அறிக்கையை தாக்கல் செய்ய அந்த தொண்டு நிறுவனங்கள் தவறியதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன்: போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இந்தியாவை சேர்ந்த மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி சகோதரிகள்
காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி (CHRI) ஆனது காமன்வெல்த் நாடுகளில் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் குறித்து வேலை செய்து வருவதாக அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAWW தொண்டு நிறுவனமானது மும்பையில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் பகுதியைச் சேர்ந்த 22 பெண்களால் இணைந்து நிறுவப்பட்டது. பெண்கள் விற்பனை செய்யப்படுவதையும் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவதையும் முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் செயல்படுவதாக அதன் இணையதளம் கூறுகிறது.
Source: PTI
திருமாவளவனை சீண்டுறது நல்லதில்ல அண்ணாமலை – ராமசுப்பிரமணியன் நேர்காணல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.