இந்தியாவில் 110 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் ஒட்டுமொத்த இளம்பெண்கள் தொடர்பான ஒன்றிய அரசின் ஒரு முக்கிய முடிவில் அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான நாடாளுமன்ற ஆய்வுக் குழுவில் 30 ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரே ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்துள்ளார். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கண்டம் தெரிவித்துள்ளார்.
பெண்களின் சட்டப்பூர்வமான திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் குழந்தைத் திருமணத் தடை (திருத்தம்) மசோதாவை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்ற 31 உறுப்பினர்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுஷ்மிதா தேவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி “பெண்களுக்கான உரிமையைத் தொடர்ந்து ஆண்களே தீர்மானித்துக் கொண்டு இருக்கிறார்கள் பெண்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே தொடர்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.