Aran Sei

‘பிரதமரின் பேரணி, பாஜகவின் பூசைகளுக்கு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பொருந்தாது’- மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

க்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான முப்தி முகமது சயீத்தின் ஆறாவது நினைவு தின விழாவை ஏற்பாடு செய்ததற்காக, அக்கட்சியைச் சேர்ந்த பத்து தலைவர்கள்மீது, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீறியதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹ்ராவின் நிர்வாக மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவில், முன்னாள் முதலமைச்சர் முப்தி முகமது சயீதின் நினைவு நாள் பேரணியை நடத்தியதற்காக, மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அப்துல் ரெஹ்மான் வீரி உள்ளிட்ட பத்து பேர்மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

வீட்டுக் காவலில் 3 முன்னாள் முதல்வர்கள்: ‘ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீராய்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்’ – குப்கர் கூட்டணி

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி அரசாங்கத்தை முஃப்தி முகமது சயீத் தலைமை தாங்கினார். 2016ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று முஃப்தி முகமது சயீத் இறந்ததைத் தொடர்ந்து, அவரது மகள் மெகபூபா முப்தி அப்பதவியை ஏற்றுக்கொண்டார். 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இக்கூட்டணி உடைந்தது.

நேற்று முன்தினம்(ஜனவரி 7), பிஜ்பெஹ்ராவில் உள்ள முப்தி முகமது சயீத்தின் கல்லறையில், அக்கட்சியினர் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்ச்சியை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். அதைத்தொடர்ந்து, அவர்கள் அவ்விடத்திலேயே போராட்டம் நடத்தியதால், கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதித்தது.

காஷ்மீர் என்கவுன்டர்: காவல்துறையின் விசாரணை அறிக்கையை நிராகரித்த கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்

நேற்று(ஜனவரி 8), அனந்த்நாக் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளியைப் பகிர்ந்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி, இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர்களில் பலர் முககவசங்களை அணிந்திருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா கட்டுப்பாடுகள் மக்கள் ஜனநாயக கட்சிக்கு மட்டுமே பொருந்தும். காஷ்மீரில் பாஜக நடத்திய போராட்டம், பஞ்சாபில் பிரதமரின் பேரணி, அவரது பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்ய நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பூஜை போன்றவற்றுக்கு அக்கட்டுப்பாடுகள் பொருந்தாது. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மக்கள் ஜனநாயக கட்சிக்கு எதிரான வெட்கக்கேடான பாரபட்சத்தைக் காட்டுகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: NDTV

‘பிரதமரின் பேரணி, பாஜகவின் பூசைகளுக்கு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பொருந்தாது’- மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்