ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அளிக்கப்பட்ட மனுக்களை, கோடை விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 25) கூறியிருந்த நிலையில், “370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை நிறுத்தி வைப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து சட்டவிரோத சட்டங்களையும் உச்ச நீதிமன்றம் நீக்க வேண்டும்” என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 26), தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மெகபூபா முஃப்தி, “சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அரசியலமைப்புச் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட ஒரு மாநிலம், இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பிடுங்கப்பட்டது. ஆனாலும், இவ்வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று ஆண்டுகள் ஆனது” என்று கூறியுள்ளார்.
A state robbed of its legal & constitutional special status was cleaved into two & disempowered. Yet it took SC 3 years to list the case. Hope the Hon’ble Court stays not only revocation of Article 370 but also reverses all the illegal laws brought in. https://t.co/i3EQksS8JY
— Mehbooba Mufti (@MehboobaMufti) April 26, 2022
மேலும், “சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை நிறுத்தி வைப்பதோடு மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீரில் கொண்டு வரப்பட்ட அனைத்து சட்டவிரோத சட்டங்களையும் மாண்புமிகு நீதிமன்றம் மாற்றியமைக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவின் விதிகளை ரத்து செய்த ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
நேற்று (ஏப்ரல் 25), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன், “ஜம்மு காஷ்மீரில் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே வாதிட்டார்.
“நான் பார்க்கிறேன். இந்த வழக்குக்கு ஐந்து நீதிபதிகள் வேண்டும். நான் இந்த அமர்வில் மாற்றங்கள் செய்கிறேன்.” என்று தலைமை நீதிபதி கூறினார்.
கோடை விடுமுறைக்குப் பிறகு, இவ்விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை மீண்டும் அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
Source: PTI
“இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது”
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.