சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பதிவேற்றியதாக ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்ட காவல்துறை பதிந்துள்ள வழக்கின் பேரில், தி காஷ்மீர் வாலா செய்தி இணையதளத்தின் ஆசிரியர் ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது குறித்து பேசியுள்ள காவல்துறை உயர் அதிகாரி, “சில ஃபேஸ்புக் பயனர்களும் இணையதளங்களும் பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கும் குற்ற நோக்கோடு, தேசவிரோத உள்ளடக்கத்தைக் கொண்ட புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பதிவுகளைப் பதிவேற்றுவதாகவும், அவ்வாறு பதிவேற்றப்படும் உள்ளடக்கம் சட்ட ஒழுங்கிற்கு எதிராக பொதுமக்களைத் திருப்பும் வகையில் இருப்பதாகவும் புல்வாமா காவல்துறை கண்டறிந்தது ஃபேஸ்புக் பயனர்கள் சிலரின் மேற்கூறிய செயற்பாடுகளில் ஈடுபட்டதால், காவல்துறை அவர்கள்மீது வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.
இவ்விசாரணையின்போது ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டார் என்றும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜனவரி 30 அன்று புல்வாமாவின் நைரா பகுதியில் என்கவுன்டரில் நான்கு தீவிரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஒருவருடைய குடும்பத்தின் கருத்துகளின் அடிப்படையில் அந்த செய்தி இணையதளத்தில் ஒரு கட்டுரையை ஃபஹத் ஷா எழுதியிருந்தார். அக்கட்டுரை தொடர்பாக, ஃபஹத் ஷா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர், கொல்லப்பட்டவர் தீவிரவாதி அல்ல என்றும் அவர் அப்பாவி என்றும் கூறியுள்ளனர்.
காஷ்மீர் என்கவுன்டர்: காவல்துறையின் விசாரணை அறிக்கையை நிராகரித்த கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்
பத்திரிகையாளர் ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி, உண்மையின் பக்கம் நிற்பது தேச விரோதமாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Standing up for the truth is deemed anti national. Showing the mirror to a deeply intolerant & authoritarian government is also anti national. Fahad’s journalistic work speaks for itself & depicts the ground reality unpalatable to GOI. How many Fahad’s will you arrest? https://t.co/G22lN487zc
— Mehbooba Mufti (@MehboobaMufti) February 4, 2022
இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையின் பக்கம் நிற்பது தேசவிரோதமாக கருதப்படுகிறது. சகிப்புத்தன்மையற்ற சர்வாதிகார அரசாங்கத்திற்கு முன் கண்ணாடியைக் காட்டுவதும் தேச விரோதமானது. ஃபஹத்தின் பத்திரிகை பணியானது இங்குள்ள யதார்த்தத்தைச் சித்தரிக்கிறது. இதை ஒன்றிய அரசு விரும்பவில்லை. இன்னும் எத்தனை ஃபஹத்களை கைது செய்வீர்கள்?” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்திகேள்வி எழுப்பியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.