மேகலாயாவில் பண்ணைவீட்டில் விபசார விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபட்ட பாஜக தலைவர் பெர்னார்டு என் மராக்குக்கு உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மேகாலயா மாநில பாஜக துணைத் தலைவர் பெர்னார்டு என் மராக். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது. இங்கு விபச்சார தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு அதிரடி சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
மேகாலயா: பாஜக துணைத் தலைவரின் பண்ணை வீட்டில் விபச்சாரம் – ரெய்டில் 73 பேர் கைது, 6 சிறார்கள் மீட்பு
இந்த சோதனையின் போது விபச்சார தொழிலில் ஈடுபட்ட 73 பேர் பிடிபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் நான்கு சிறுவர்கள், இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட ஆறு சிறார்களும் அடக்கம். இந்த சிறார்கள் பதுங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கிருந்து 400 மது பாட்டில்கள், 500க்கும் மேற்பட்ட காண்டம் பாக்கெட்டுகள், 27 வாகனங்கள், 47 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்பின் தலைமறைவாகிய மராக்கை உத்தரபிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மேகாலயா உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தலைமறைவாகவோ அல்லது ஆதாரங்களை சிதைக்கவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ கூடாது மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மராக் ஜாமீன் பெற்றுள்ளார்.
Source : the hindu
RSS பேரணிக்கு ஆப்பு வைத்த திருமா | எனக்குன்னே வருவீங்களானு கதறும் RSS | Aransei Roast | BJP | VCK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.