Aran Sei

இந்து அமைப்புகள் தடை செய்யக் கோரிய ‘மீஷா’ – சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்றது

கேரள மாநிலத்தில், இந்துத்துவா அமைப்புகள் தடை செய்யக் கோரி போராட்டம் நடத்திய நாவல், அம்மாநிலத்தின் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, எஸ்.ஹரீஷ் எழுதிய மீஷா (மீசை) எனும் நாவல், மலையாள வார இதழான மாத்ருபூமியில் தொடர்கதையாக வெளியானது.

இந்த கதை கோயிலுக்குச் செல்லும் பெண்களையும், பிராமணர்களையும் இழிவுப்படுத்துவதாக கூறி வலதுசாரி அமைப்புகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்த போராட்டத்தில், மாத்ருபூமியில் வெளியான அந்தக் கதையின் பக்கங்கள் கிழிக்கப்பட்டு கொளுத்தப்பட்டன.

மண்ணையும் மக்களையும் கற்க ஆற்றுப்படுத்திய பேராசான் தொ.ப – மாணவர் அஞ்சலி

இதையடுத்து, நாவல் ஆசிரியரான ஹரீஷ் உடனடியாக மாத்ரூபூமிக்கு அனுப்பிய தனது கதையை உடனடியாக  திரும்ப பெற்றார். இதுகுறித்து அவர், “எனக்கும் எனது குடும்பத்திற்கும் எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களால் எனது நாவலைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன். இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்களை எதிர்க்கும் அளவுக்கு, நான் பலம் பொருந்தியவனாக இல்லை” என்று தெரிவித்தார்.

10வது ஆண்டில் நுழையும் சிரிய உள்நாட்டுப்போர் – எப்போது முடியும் இந்த ரத்தக்களறி?

இதன் பின்னர், 2019 ஆம் ஆண்டு டிசி புக்ஸ் எனும் பதிப்பகம், மீஷா நாவலை வெளியிட்டது. நல்ல எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் வெளிக் கொண்டுவர வேண்டும் என டிசி நிறுவனம் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

பழங்குடிகள் குறித்த ‘காடர்’ சிறுகதைத் தொகுப்பு : கலைவழி பரவும் அரசியல்

இந்நிலையில் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 15), 2019 ஆம் ஆண்டிற்கான கேரளாவின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நவாலாக மீஷா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பீமா கோரோகான் வழக்கு – சிறையில் உள்ள சுதா பரத்வாஜ் புத்தகங்கள் பெற என்ஐஏ நீதிமன்றம் அனுமதி

மீஷா நாவலுக்கு கேரள மாநிலத்தின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில பாஜக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள பாஜகவின் மாநில தலைவர் கே.சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இத்தகைய அசிங்கமான நாவலை கேரளா இதுவரை பார்த்ததில்லை. மீஷாவுக்கு விருது வழங்குவதற்கான முடிவை, இந்து சமூகத்திற்கு எதிரான செயலாக பார்க்க வேண்டும். கேரளாவில் சபரிமலை விவகாரம் தொடங்கி, தொடர்ந்து இந்து சமூகம் அவமதிக்கப்பட்டு வருகிறது”. என்று தெரிவித்துள்ளார்.

Source: PTI

இந்து அமைப்புகள் தடை செய்யக் கோரிய ‘மீஷா’ – சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்றது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்