Aran Sei

பட்டியலின மக்களை அவமதித்த மீரா மிதுன் வழக்கு: ‘எந்த ஒரு சமூகத்தையும் தவறாக பேசுவதை அனுமதிக்கக் கூடாது’ – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

ட்டியலின மக்களை அவமதித்த மீரா மிதுன் வழக்கு தொடர்பான விசாரணையில், “அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள். எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய ஓரு காணொளியை நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

கும்பகோணம்: புதுமண தம்பதிகளை ஆணவக் கொலை செய்த உறவினர்கள் – காவல்துறை வழக்குப்பதிவு

இதன் அடிப்படையில், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்தியத் தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பட்டியலினத்தவர்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை எனவும், நடிகை மீரா மிதுன் பேசும்போது அருகில் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை: நகை திருட்டு வழக்கில் விசாரணைக் கைதி லாக்கப் மரணம் – காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்.

காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் பேசுவதை ஆதரித்ததுடன், அவர் பேசுவதற்கு உறுதுணையாக அவரது நண்பர் ஷாம் அபிஷேக் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, நம் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தார். பின் மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப்பெறுவதாக தெரிவித்ததை ஏற்று, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Source : puthiyathalaimurai 

Bulldozer- ஐ வெச்சே ஆட்சி நடத்தும் BJP | Yogi Adityanath | Nupur Sharma

பட்டியலின மக்களை அவமதித்த மீரா மிதுன் வழக்கு: ‘எந்த ஒரு சமூகத்தையும் தவறாக பேசுவதை அனுமதிக்கக் கூடாது’ – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்