Aran Sei

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் வழக்கு: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

போர் காரணமாக உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர்வது தொடர்பாக மாணவர்களின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்கள் 20,000 பேர் நாடு திரும்பினர். இவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கு நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறைக்கான மக்களவை குழு, ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது. ஆனால் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது.

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்து இஸ்லாமியர்கள் மேல் பழி சுமத்தும் ஆர்எஸ்எஸ் – முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு

இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில், ‘உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் படிப்பை தொடர வெளியுறவு துறைக்கான மக்களவைக் குழு பரிந்துரை செய்த நிலையில் ஒன்றிய அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் – நுகர்வோர் விரும்புவதாக ஆய்வில் தகவல்

எனவே ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. அப்போது இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தேசிய மருத்துவ கல்வி ஆணையம் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

ஒன்று கூடிய தென்னிந்தியா, தலைமையேற்கும் ஸ்டாலின் | Indra Kumar Theradi | PTR | MK Stalin | Amit Shah

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் வழக்கு: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்