பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் மொரீஷியஸ் நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார் ஜ க்நாத் ஒரு வார கால பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மொரீஷியஸ், இந்திய வம்சாவளி மக்களை அதிகம் கொண்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று (ஏப்ரல் 18) தரையிறங்கியுள்ள, பிரவிந்த் குமார் ஜுக்நாத், அவரது மனைவி ஆகியோர் உரிய அரசு மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளனர்.
பிரவிந்த் குமார் ஜக்நாத்தை வரவேற்க கூடியிருந்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டுள்ளனர்.
“இந்தியாவும் மொரிஷியஸும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளவை. இருநாடுகளும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளன. தற்போதைய இந்த பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்” என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: New Indian Express
இளையராஜா, அம்பேத்கர், யுவன், மோடி சர்ச்சை… விளக்கமளிக்கிறார் பேரா. சுந்தரவள்ளி
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.