மனைவியிடம் கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்புணர்வு குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகப் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் மருத்துவ முறையில் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Marital Rape: இந்தியத் தண்டனைச் சட்டத்தில் நிகழந்துள்ள மாற்றங்களும் வழக்கு கடந்து வந்த பாதையும்
“ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்பு சட்டவிரோதமாகாது. இந்த உரிமையை மருத்துவக் கருவுறுதல் சட்டம் 1971(MTP) அனுமதிக்கிறது. திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகப் பெண்கள் என்ற பாகுபாடு இல்லை. அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் கர்ப்பம் தரித்து 24 வாரங்கள் வரை மருத்துவ முறையில் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உண்டு என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், ‘சமயங்களில் திருமண உறவுகளில் வலுக்கட்டாயமாகப் பெண்கள் உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம் தரிக்கிறார்கள். வலுக்கட்டாயமாகக் கருத்தரித்த பெண்களை அதிலிருந்து காப்பாற்ற இந்த சட்டம் அனுமதிக்கிறது. எனவே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பிழைத்து வரும் பெண்களைப் போலவே திருமணமாகி வலுக்கட்டாயமாகக் கர்ப்பம் தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவனாகவே இருந்தாலும் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்வது குற்றம்தான் – கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து
இந்த வழக்கில், மனைவியிடம் கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்புணர்வு குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ல், தனது மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்ற விதிவிலக்கு உள்ளது. இந்த விதிவிலக்கை நீக்கக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.ஹரி சங்கர் மற்றும் ராஜீவ் ஷக்தேர் ஆகியோர், கடந்த மே 11-ம் தேதி இருவித தீர்ப்புகளை வழங்கினர்.
சட்டப் பிரிவு 375-ல் இருக்கும் இந்த விதிவிலக்கு சட்டவிரோதமானது என்றும், ஆண் – பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டப் பிரிவு 14-க்கு எதிரானது என்றும் கூறி, அந்த விதிவிலக்கை நீதிபதி ராஜிவ் ஷக்தேர் ரத்து செய்து உத்தரவிட்டார்.
பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே – டெல்லி நீதிமன்றம் உத்தரவு
மற்றொரு நீதிபதியான ஹரி சங்கர், சட்டப்பிரிவு 375-ல் இருக்கும் விதிவிலக்கு சட்டவிரோதமானது அல்ல என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். சமத்துவம், பேச்சு சுதந்திரம், வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளை அது மீறவில்லை என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்பொழுது, மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொள்வதை பாலியல் குற்றமாக அறிவிக்கக் கோரும் வழக்கில், ஒன்றிய அரசு பதில் அளிக்க செப்டம்பர் 16 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே கருக்கலைப்பு சம்பந்தமான வழக்கில் மனைவியிடம் கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்புணர்வு குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து இவ்வழக்கில் முன்னுதாரணமாக மேற்கோள் காட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Source : the hindu
சோழர் பெருமை – பார்ப்பன பெருமை ரெண்டுமே ஒன்னுதான் | Maruthu Interview | Ponniyin Selvan | Rajarajan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.