Aran Sei

Marital Rape: இந்தியத் தண்டனைச் சட்டத்தில் நிகழந்துள்ள மாற்றங்களும் வழக்கு கடந்து வந்த பாதையும்

Image Credits: India TV News

திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை குற்றமாக்குவது மற்றும் விதிவிலக்கு கொடுப்பது தொடர்பாக இந்தியத் தண்டனைச் சட்டத்தில் நிகழந்துள்ள மாற்றங்களையும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையையும் காலவரிசைப்படி காண்போம்.

1860: 10 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்ணிடம் கணவன் கட்டாய பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகாது என்று இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) கூறியுள்ளது.

 1940: இந்தியத் தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, 15 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்ணிடம் கணவன் கட்டாய பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகாது என்று கூறியது.

ஜன. 11, 2016: மனைவியிடம் கட்டாயப் பாலுறவு கொள்வதற்கு விதிவிலக்களிப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட முதல் வழக்கில் ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

Marital Rape: குற்றம், குற்றமில்லையென இருவேறு தீர்ப்புகளை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பரிந்துரை

ஆகஸ்ட் 29, 2017: திருமண உறுவை சீர்குலைக்கும் திருமணத்திற்கு பின்னரான கட்டாயப் பாலுறவை கிரிமினல் குற்றமாக மாற்ற முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 11, 2017: பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் ஒரு கணவன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜன. 18, 2018: திருமணத்திற்கு பின்னரான கட்டாயப் பாலுறவு சட்டப்படி குற்றம் என்றும் கணவனுடன் உடலுறவை மறுக்க ஒரு பெண்ணுக்கு உரிமை உள்ளது என்றும் டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 7, 2022: திருமணத்திற்கு பின்னரான கட்டாயப் பாலுறவை குற்றமாக்கக் கோரும் மனுக்கள்மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் தொடங்கியது.

ஜனவரி 13: திருமணத்திற்கு பின்னரான கட்டாயப் பாலுறவை குற்றமாக்கும் விவகாரத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையைப் பரிசீலித்து வருவதாகவும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்டவர்களிடமிருந்து பரிந்துரைகளை கோரியுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது.

‘உடலுறவிற்கு மனைவியின் சம்மதம் கட்டாயமா?’- எங்களுக்கு திருமணமே வேண்டாமென ட்வீட் செய்யும் ஆண்கள்

ஜன. 17: இந்த விவகாரத்தின் அரசின் கொள்கை நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு ஒன்றிய அரசை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ஜனவரி 24: உயர் நீதிமன்றத்தின் முன் தனது நிலைப்பாட்டை வைக்க அவகாசம் வழங்குமாறு ஒன்றிய அரசு கோரியது.

ஜனவரி 28: : திருமணத்திற்கு பின்னரான கட்டாயப் பாலுறவை கிரிமினல் குற்றமாக மாற்ற முடியாது என்று 2017 ஆம் ஆண்டு அளித்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற விரும்புகிறதா என்பதை தெரிவிக்குமாறு ஒன்றிய அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டது.

பிப்ரவரி 1: பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்த முந்தைய நிலைபாட்டை மறுபரிசீலனை செய்வதாக உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது.

பிப்ரவரி 3: திருமணத்திற்கு பின்னரான கட்டாயப் பாலுறவை குற்றமாக்குவதற்கான மனுக்கள்மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றத்தை ஒன்றிய அரசு வலியுறுத்தியது.

பிப்ரவரி 7: மனுக்கள்மீதான தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம்.

திருமணத்திற்கு பிறகு பாலியல் வல்லுறவு கொண்டால் விவாகரத்துப் பெறலாம் – கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

பிப்ரவரி 21: மனுக்கள்மீதான தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அரசின் ஆலோசனைகள் எப்போது முடியும் என்று உறுதியான தேதி தெரியாததால், நடந்து வரும் வழக்கை ஒத்திவைக்க முடியாது என்று கூறி ஒன்றிய அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்க மறுத்தது.

மே 11: திருமணத்திற்கு பின்னரான கட்டாயப் பாலுறவை குற்றமாக்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இருவேறுபட்ட தீர்ப்பை வழங்கியது.மேலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கட்சிகளுக்கு அனுமதி வழங்கியது.

Source: ndtv

இலங்கையில் நடப்பது இது தான்? | Tu Senan Interview

Marital Rape: இந்தியத் தண்டனைச் சட்டத்தில் நிகழந்துள்ள மாற்றங்களும் வழக்கு கடந்து வந்த பாதையும்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்