தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து சமூக வலைதளங்களில் ‘இழிவான’ பதிவைப் பகிர்ந்ததாகக் கூறி, மராத்தி நடிகர் கேதகி சித்தாலே மீது வழக்குப் பதிவு செய்து தானே காவல்துறையினர் இன்று(14 மே 2022) கைது செய்துள்ளனர்.
மாராத்தியில் எழுதப்பட்ட அந்த பதிவு வேறொருவரால் எழுதப்பட்டதாக கூறப்படுகிறதார். மேலும் அந்தப் பதிவை அவர் பகிர மட்டுதான் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
அவர் பகிர்ந்த பதிவில், “நரகம் காத்திருக்கிறது” மற்றும் “நீங்கள் பார்ப்பனர்களை வெறுக்கிறீர்கள்” போன்றவை எழுதப்பட்டிருந்தது. மேலும், அவருடைய பெயரின் பின்னொட்டு(Sur Name) பவார் என்றிருக்கும்; அவருடைய வயது 81 என்று பதியப்பட்டிருந்து.
மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் காங்கிரஸுடன் ஆளும் கட்சி கூட்டணியாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இருப்பது நினைவுகூரத்தக்கது.
ஸ்வப்னில் நெட்கே என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தானேயில் உள்ள கல்வா காவல் நிலையத்தில் நடிகர் கேதகி சித்தாலுக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஞானவாபி மசூதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? – ஒவைசி கேள்வி
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 500 (அவதூறு), 501 (அவதூறானதாக அறியப்படும் விஷயத்தை), 505 (2) (எந்தவொரு அறிக்கை, வதந்தி அல்லது பகை, வெறுப்பை ஊக்குவித்தல் மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் அறிக்கைகளை உருவாக்குதல், வெளியிடுதல் அல்லது பரப்புதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வகுப்புவாத கலவரத்தை உருவாக்குதல்), 153 ஏ (மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையைப் பரப்புதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளானர்.
மராத்தி நடிகர் கேதகி சித்தாலே மீது நடவடிக்கை எடுக்க்க் கோரி தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் புனே காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: Thenewindianexpress
ஈழத்த பத்தி பாஜக வாயவே திறக்க கூடாது Kalanjiyam Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.