Aran Sei

வந்தே மாதரம் ரயில்களுக்கான சக்கரங்கள் தயாரிப்பு: சீன நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே ஒப்பந்தம்:

ஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பிற நாடுகளில் இருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 39 ஆயிரம் ரயில் சக்கங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு இந்தியன் ரயில்வே வழங்கியுள்ளது.

வந்தே மாதரம் ரயில்களுக்கு சக்கரங்களை தயாரிக்க ரூ.170 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் TZ (தைஜோங்) ஹாங்காங் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக ரயில் சக்கரங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு கழகத்தை மூடும் ரயில்வே வாரியம் – இரண்டு மாதங்களில் மூடப்படும் இரண்டாவது நிறுவனம்

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலுக்கு பிறகு, இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் விநியோகங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

தைஜோங் நிறுவனத்திற்கு கடைசியாக மார்ச் 2020-ல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில் சக்கரங்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ஏப்ரல் 4 தேதி கோரப்பட்டு மே 2 தேதி தைஜோங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

விலை போகாத ரயில்வே வழித்தடங்கள் – மலிவு விலைக்கு விற்க முடிவு செய்திருக்கிறதா ஒன்றிய அரசு?

இந்தியாவின் கிழக்கு பகுதியான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களை ஒட்டிய சர்வதேச எல்லைப்பகுதியில், சீன ராணுவம் 5ஜி தொலைத் தொடர்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருகிறது என்று இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவுத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராணா பிரதாப் கலிதா தெரிவித்துள்ளார்.

“அடிப்படையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் சீன ராணுவம் மேற்கொண்டு வருகிறது. குறுகிய காலத்திற்குள் படைகள் திரட்டுவதற்கு ஒரு சிறந்த சூழ்நிலையை உறுதி செய்யும் முயற்சியில் சீன ராணுவம் இறங்கியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

‘தனியார் ரயில்களுக்கு 30,000 கோடி முதலீடு வேண்டும்.’ – ரயில்வே துறை அறிக்கை

எல்லைகளில் கட்டமைப்புகளை மேம்படுத்தி இந்தியாவை சீனா அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் வேளையில், சீன நிறுவனத்திற்கு இந்திய அரசின் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Economic Times, Times of India

காசி ஆனந்தனின் தியாகத்தை கொச்சை படுத்த முடியாது | Thiruma Speech | VCK | Aransei | Annamalai | BJP

வந்தே மாதரம் ரயில்களுக்கான சக்கரங்கள் தயாரிப்பு: சீன நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே ஒப்பந்தம்:

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்