கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த புகாரின் பெயரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
தடுப்பூசிகுறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் எனக்கூறிய நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் வழக்கு பதியப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியிருந்தார்
அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
“ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும்” – ஆர்எஸ்எஸ், ஈஷாவால் மிரட்டப்படும் பெ.மணியரசன்
அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டாதாகவும், உள்நோக்கத்தோடு தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லையெனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.