Aran Sei

‘மதம் மாறியவர்கள் தேசத்துரோகிகள்’ என பேசிய மன்னார்குடி ஜீயர்: தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு காவல்துறையில் புகார்

தம் மாறியவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள்” என்றும் “இந்து விரோதமாக யார் பேசினாலும் எல்லா விதத்திலும் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டிய மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது.

கடந்த ஜூன் 5 ஆம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பாக துறவிகள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மன்னார்குடி ஜீயர், மதுரை ஆதீனம் உள்பட பல ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

‘எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை’: நடிகர் விஜய் நடித்த படங்களை பார்க்க வேண்டாமென கூறிய மதுரை ஆதீனத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்

இதில் வன்முறை மற்றும் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துக்களையும் பேசிய மன்னார்குடி ஜீயர் மற்றும் ஆதீனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மதுரை மாவட்டச் செயலாளராக உள்ள சிராஜ்தீன் அவர்கள் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய உரையாற்றிய மன்னார்குடி ஜீயர், “மதம் மாறியவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள்” என்றும் “இந்து விரோதமாக யார் பேசினாலும் எல்லா விதத்திலும் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டியும் அவர் வன்முறையைத் தூண்டியுள்ளார் என்று சிராஜ்தீன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் தாங்கள் விரும்பு மதத்தை ஏற்கலாம், பின்பற்றலாம், அதை பிரச்சாரம் செய்யலாம் என்ற அடிப்படை உரிமையை இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. இந்நிலையில் அரசியல் சாசன உரிமையின் அடிப்படையில் மதம் மாறியவர்களை தேசத்துரோகிகள் என்று வகுப்புவாத கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய மன்னார்குடி ஜீயர் மீதும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசிய ஆதீனங்கள் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் சிராஜ்தீன் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனத்திற்கு வாத்தி ரெய்டு | கொந்தளித்த actor Vijay ரசிகர்கள்

‘மதம் மாறியவர்கள் தேசத்துரோகிகள்’ என பேசிய மன்னார்குடி ஜீயர்: தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு காவல்துறையில் புகார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்