Aran Sei

மணிப்பூர் தேர்தல் பரப்புரை: ‘‘மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா’’ – ராகுல் காந்தி

ணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இம்பாலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நான் பணிவுடன் வருகிறேன், ஏனென்றால் நீங்கள் கொடுக்க நிறைய இருக்கிறது, உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். பலதரப்பட்ட பழங்குடியினர், பள்ளத்தாக்குகள், மலைகள், இங்குள்ள அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

கர்நாடகாவில் பஜ்ரங் தள் உறுப்பினர் கொலை – வன்முறை, வாகனங்களுக்கு தீ வைப்பு

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மணிப்பூருக்கு வரும்போது மரியாதையுடன் வரவில்லை, புரிந்துகொண்டு வரவில்லை. அவர்கள் ஆதிக்க உணர்வுடன் வருகிறார்கள். நான் இங்கு வரும்போது, நான் என்ற உணர்வுடன் வரவில்லை, பணிவுடன் வருகிறேன்.

நமது நாட்டின் நிலைமை குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். நமது நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்று அங்கு நான் விவரித்தேன். இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை. அரசியலமைப்புச் சட்டத்தில், மாநிலங்களின் ஒன்றியம் என நம்மை வரையறுத்தே தேர்வு செய்துள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் தேர்தல் பரப்புரை: ‘‘மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா’’ – ராகுல் காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்