Aran Sei

மங்களூரு: மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கோவில் போன்ற அமைப்பு – 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம்

Credit: Puthiyathalaimurai

ங்களூருவில் மசூதிக்குள் கோவில்ப் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூருவின் மலாலி பகுதியில் ஜும்மா மஸ்ஜித் அமைந்துள்ளது. இந்த மசூதியை புனரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில், அங்கு இந்து கோவில் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மசூதிக்குள் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் எழுப்பியுள்ளன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாளை (மே 26) தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா: ‘ஜுமா மசூதி முன்பு அனுமன் கோயிலாக இருந்தது, ஆகவே அங்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்’ – இந்துத்துவாவினர் கோரிக்கை

அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரிவித்துள்ள தக்‌ஷின் கன்னடா துணை ஆணையர் கே.வி. ராஜேந்திரா, “மசூதிக்குள் கோவில் போன்ற அமைப்பு இருப்பதாக கூறப்படுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். இதில் உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை, சம்பந்தப்பட்ட இடத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். விசாரணை முடியும் வரை மக்கள் எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். அனைவரும் அமைதியை பேண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalaiamurai 

இளவரசு கிட்ட 20 அறை வாங்குனேன் Bigg Boss Suresh Chakravarthy Interview | Nenjukku Needhi | Arunraja

மங்களூரு: மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கோவில் போன்ற அமைப்பு – 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்