சென்னை மகேந்திரா சிட்டியில் இயங்கிவந்த ஜெர்மன் நிறுவனமான ’ஸ்லாம்’ ஆடை நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பின்றி தொழிற்சாலையை மூடியாதால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களுக்கு வர வேண்டிய நிவாரனத்தைக் கேட்டுப் போராடி வருகின்றனர்.
கடந்த 13 மாதங்களாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) நிறுவனம் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்துள்ளதாகவும் ஆனால், அவர்களின் கணக்குகளில் பிஎஃப் பணத்தை வைப்பு வைக்கவில்லை என்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அயோத்தியில் உயரமான ராமர் சிலை – நிலத்தையும் வீடுகளையும் இழக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள்
எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுவனத்தை மூடிய ‘ஸ்லாம்’, தொழிலாளர்களிடம் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று 9 வருடங்களாக அந்நிறுவனத்தில் பணி புரிந்த பரிமளா அரண்செய்யிடம் தெரிவித்தார்.
மேலும், நிறுவனத்தை மூடியத்திற்கான காரணத்தை நிர்வாகம் தெரியப்படுத்தவில்லை என்றும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்தும் நிறுவனம் இதுவரை எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை என்றும் தங்களுக்குத் வரவேண்டிய தொகையைத் நிறுவனம் அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஏறத்தாழ 130 தொழிலாளர்கள் பணிபுரிந்த நிறுவனத்தில், இதுவரை யாருக்கும் வரவேண்டிய பணத்தை தரவில்லை என்று குற்றஞ்சாட்டிய பரிமளா, நிறுவனத்தை நம்பி இருந்ததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு, இதில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் கூறினார்.
பி.எஃப் உட்பட தங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை கொடுத்து பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும், ஸ்லாம் ஆடைகள் நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரியதாகவும், இந்தப் போராட்டத்திற்கு ஆடை மற்றும் பேஷன் தொழிலாளர் சங்கம் (GAFWU) தலைமை தாங்கியதாகவும் பரிமளா தெரிவித்தார்.
ஸ்லாம் ஆடை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிலாளர் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் பேச்சுவார்த்தைக்கு நிர்வாகத்தை கொண்டு வர முயற்சிப்பதில் அவர்கள் ‘தங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறார்கள்’ என்றும் விசாரணைக்கு உத்தரவிடவோ அல்லது பிரச்சினையை தீர்க்க உதவவோ மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை என்றும் தொழிலாளர்துறை உதவி ஆணையர் தெரிவித்ததாக டிஎன்லேபர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.