Aran Sei

சென்னை: நகை திருட்டு வழக்கில் விசாரணைக் கைதி லாக்கப் மரணம் – காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்.

சென்னை கொடுங்கையூரில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் அலமாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையின்போது செங்குன்றத்தில் உள்ள நண்பர்களிடம் நகைகளை கொடுத்து வைத்திருப்பதாக ராஜசேகர் கூறியுள்ளார். அடுத்து அவர்களிடம் சென்று விசாரணை நடத்திய காவல்துறையினரால் நகையை மீட்க முடியவில்லை.

விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கு: காவல்துறையினரை கைது செய்ய இருப்பதாக சிபிசிஐடி தகவல்

இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரை ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்குத் தீடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவருக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்

இந்நிலையில் உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி, நகை திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணை கைதி மரணம் அடைந்ததை அறிந்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு  இணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ராஜசேகரிடம் விசாரணை செய்த காவலர்கள் யார்? எங்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது  என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் விசாரணைக் கைதி மரணம் – விசாரணையைத் தொடங்கியது சிபிசிஐடி

இதில், ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், துணை ஆய்வாளர் பொன்ராஜ், கன்னியப்பன், தலைமை காவலர்கள் ஜெய சேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கப் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜசேகர் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம் – சிபிசிஐடி விசாரணை கோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பணியிடை நீக்க செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. துறை ரீதியாக அவர்மீது பல புகார்கள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 10 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. கடந்த 3 மாதங்களில் சென்னையில் நடைபெறும் இரண்டாவது லாக்கப் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalaimurai

அண்ணாமலை முட்டுக் கொடுப்பாரா? பாலியல் குற்றவாளியை தண்டிக்க போராடுவாரா? | BJP | Virudhunagar

சென்னை: நகை திருட்டு வழக்கில் விசாரணைக் கைதி லாக்கப் மரணம் – காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்