Aran Sei

ம.பி: இஸ்லாமியர் என சந்தேகிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்த முதியவர் – பாஜக பிரமுகரைக் கைது செய்த காவல்துறை

Credit: The Wire

த்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இஸ்லாமியர் என சந்தேகிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் முதியவர் உயிரிழந்தது தொடர்பாக பாஜக பிரமுகரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீமுச் மாவட்டத்தின் மானசா பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் பன்வர்லால் ஜெயின். மனநலம் பாதிக்கப்பட்ட பன்வர்லாலை, இஸ்லாமியர் என சந்தேகப்பட்டு தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், உன் பெயர் முகம்மதா?. ஆதார் கார்டு உள்ளதா? போன்ற கேள்விகளை கேட்டு அவர்கள் பன்வர்லால் கன்னத்தில் அறைகின்றனர்.

மத்திய பிரதேசம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 2 பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள் – 9 பேர் கைது

இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான பன்வர்லாலில்ன் உடல் மானசா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மானசா காவல்நிலையம் முன்பாக திரண்ட பன்வர்லாலின் காவல்துறையினர், மரணத்திற்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302/304கீழ் மானசா காவல்துறையினர் கொலை வழக்கு பதிவூ செய்துள்ளனர். விசாரணையில் சம்பவத்திற்கு காரணமானவர் அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தினேஷ் குஷ்வா என தெரிய வந்ததை அடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியபிரதேசம்: இறுதிச் சடங்கு செய்ய தலித் குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு – 3 பேரை கைது செய்த காவல்துறை

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், “சியோனியில் ஆதிவாசிகள்  அடித்துக் கொல்லப்பட்டனர். குணா, மோவ், மாண்ட்லாவைத் தொடர்ந்து தற்போது, மானசா, நீமுச்சில் பன்வர்லால் ஜெயின் என்ற முதியவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். சியோனியைப் போலவே இந்த சம்பவத்திலும் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவைச் சேர்ந்தவர். சட்டம்-ஒழுங்கு எங்கே, இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே மக்கள் கொல்லப்படுவார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: The Hindu Tamil

கொல்லப்பட்ட மக்கள் குற்றவாளிகளா? Maruthaiyan Interview | Thoothukudi Sterlite Issue Remembrance 2022

ம.பி: இஸ்லாமியர் என சந்தேகிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்த முதியவர் – பாஜக பிரமுகரைக் கைது செய்த காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்