தீஷா ரவி மீது நடவடிக்கை எடுக்கும் பாஜக அரசு, முதலில் போலி செய்தியை பரப்பிக் கொண்டிருக்கும் பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் மீது தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்” (ஆவணம்) ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரிந்தார். இதுதொடர்பாக, டெல்லி காவல்துறை அவர் மீது தேசதுரோகம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
தீஷா ரவி கைது – அகிலேஷ் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, சசி தரூர், கவிதா கிருஷ்ணன் கண்டனம்
டூல்-கிட் என்பது, போராட்டங்களுக்காகத் தயாரிக்கப்படுவது. அது போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இயக்கத்தில் பங்கேற்க உதவுகிறது. அதிக எண்ணிக்கையில் ஆதரவாளர்களைத் திரட்டுவதன் மூலம் இயக்கத்தை வலுப்படுத்துகிறது. ஒரு நீண்ட கால இயக்கத்தில், போராட்டத்தின் நியாயங்களைத் தெளிவுபடுத்தும் ஒரு துண்டறிக்கையின் புதிய வடிவம் என்று டூல்-கிட்டை கருதலாம்.
தீஷா ரவி கைது: ’டெல்லி காவல்துறையின் அசிங்கமான நடவடிக்கை’ – நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்
பொது வெளியில் இருக்கும் அந்த டூல் கிட்டை திருத்தி காரணத்திற்காக, பெங்ளுரைச் சேர்ந்த, 21 வயது பருவநிலை செயல்பர்ட்டாளர் தீஷா ரவி, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தீஷா ரவி, கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக அனைவரையும் கைது செய்வது ஏற்புடையது அல்ல. முதலில் பாஜக அரசு போலி செய்திகளை பரப்பும் அவர்களது கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன், இரண்டு விதமான விதிகள் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.