திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தனது கடந்த கால அனுபவங்களை விட்டுவிட்டு 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்கத் தயாராக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத் பவார், “மம்தா பானர்ஜி கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை எதிர்த்ததால் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சாத்தியமா என்று கேள்வி கேட்கப்பட்டது. தேசிய நலனுக்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மம்தா பானர்ஜி தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எனது கடைசி போராட்டம் – மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தின் நடந்த கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது, இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜகவுக்கு ஆதாயம் அளித்தது. ஆனால் அவர் தனது கடந்த கால அனுபவங்களை தேசிய நலன்களுக்காக விட்டுவிட்டு, ஒரு கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைய தயாராக உள்ளார் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமாருடனான தனது கலந்துரையாடல் குறித்து விவரித்த சரத்பவார், நிதிஷ் குமார் தனது மனதில் என்ன இருக்கிறது என்பதை தன்னிடம் கூறினார். இந்திய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தேவைப்படுகிறது. நிதீஷ் குமார், பரூக் அப்துல்லா மற்றும் பிற சகாக்களாக இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்று அவர் கூறியுள்ளார்.
Source : india today
Who is behind the Communal Violence in Leicester ? Asia Cup | India vs Pakistan | Deva’s Update 27
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.