Aran Sei

2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழிநடத்த மம்தா பானர்ஜியே பொருத்தமானவர் – அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கருத்து

2024 நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழிநடத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் பொருத்தமானவர். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பகுதியினர் பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக தங்களுக்குள் சண்டையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று அசாம் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரிபுன் போரா கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இணைந்த அஸ்ஸாம் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் போரா, காங்கிரஸின் பல தலைவர்கள் வடகிழக்கு மாநிலத்தில் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அழகர் கள்ளழகராக மாறியது எதனால்? – சூர்யா சேவியர்

பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “அரசியலமைப்பு, ஜனநாயகம், நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாஜக அச்சுறுத்தலாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

“பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், கெடுவாய்ப்பாக  பல்வேறு மாநிலங்களில் உள்ள அதன் தலைவர்கள் பாஜகவுடன் சண்டையிடுவதை விட கட்சிக்குள் போரிட்டுக் கொள்கிறார்கள்,” என்று ரிபுன் போரா கூறியுள்ளார்.

நான் 2016 முதல் 2021 வரை அஸ்ஸாம் காங்கிரஸின் தலைவராக இருந்தேன். கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். ஆனால் மூத்த தலைவர்களில் ஒரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டதால்  மக்கள் மனச்சோர்வடைந்தனர். நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை

1976 ஆம் ஆண்டு மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் உறுப்பினரான போரா, சித்தாந்த ரீதியாக காங்கிரஸைப் போலவே இருந்ததால் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இணைந்ததாகக் கூறியுள்ளார்.

பாஜகவை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆக்ரோஷமாக போராடிய விதம் நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்று கூறிய அவர், காங்கிரஸில் தனது ஆற்றலை வீணடிக்க விரும்பாததால், காங்கிரசை விட்டு வெளியேறியதாக போரா தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் பாஜகவை எதிர்த்துப் போராடுவதில் ஆர்வம் காட்டாத காங்கிரஸில் இருந்து எனது சக்தியை வீணடிக்க நான் விரும்பவில்லை. அசாமில் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பவே நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்  சேர்ந்துள்ளேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

‘பாஜகவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைவோம்’ – எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்

“பாஜகவுக்கு எதிராகப் ராகுல் காந்தி போராடினார். ஆனால் அது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மம்தா பானர்ஜியும் போராடி மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தினார். காங்கிரஸ் அல்லது ராகுல் காந்தியை விட மம்தா பானர்ஜிதான் பாஜகவுக்கு எதிராக இருக்கும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் காங்கிரஸ் கமிட்டியில் உட்கட்சிப் பூசல் குறித்து கட்சியின் தேசிய தலைமையிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அசாம் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ரிபுன் போரா கூறியுள்ளார்.

Source: newindianexpress

அரண்செய் மீது பரப்பப்படும் அவதூறுக்கான பதில்

2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழிநடத்த மம்தா பானர்ஜியே பொருத்தமானவர் – அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்