மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹதுல் முஸ்லிமீன் (ஏஐம்ஐஎம்) கட்சி, ஒரு பொருட்டே இல்லை என்றும், அது பாஜகவின் பி- டீம் என்று பீகார் சட்டமன்ற தேர்தலிலேயே அம்பலமாகிவிட்டது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், கலந்துக்கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவுக்கும் பிளவுகளை உருவாக்கும் சக்திகளுக்கும் எதிராக, ஒன்றுப்பட்ட போராட்டத்தை நடத்துமாறு தன் கட்சியினரை வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமியர் வாக்குகளை பிரிக்க பாஜகவிடம் இருந்து பணம் வாங்கும் ஓவைசி : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
“முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஏஐம்ஐஎம் கட்சி ஒரு பொருட்டாக இருக்காது என்று இந்த முக்கிய கூட்டத்தில் மம்தா திதி (அக்கா) உறுதியளித்தார். பீகார் தேர்தலுக்குப் பிறகு ஒவைசி கட்சியின் உண்மை ரூபம் அம்பலப்படுத்தப்பட்டதாக அவர் எங்களிடம் கூறினார்.” என்று உள்ளூர் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில், மேற்கு வங்கத்தின் எல்லையில் உள்ள, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சீமஞ்சல் பகுதியில், ஐந்து இடங்களை ஏஐம்ஐஎம் கட்சி வென்றது.
ஒவைசியை அழைத்ததா திமுக?: பாஜகவை வீழ்த்த யாருடனும் கைகோர்க்க தயார் – ஐயூஎம்எல்
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில், ஏஐம்ஐஎம் கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே ஓவைசி அறிவித்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில், ஹூக்லி மாவட்டத்தில், ஃபர்ஃபுரா ஷெரீப் கிராமத்தை சேர்ந்த, பிர்சாடா அப்பாஸ் சித்திகியை ஓவைசி சந்தித்து, பேசியிருந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 21), பிர்சாடா அப்பாஸ் சித்திக் ‘இந்திய மதசார்பற்ற முன்னணி’ என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கி, மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.