மாநில முதலமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற கூட்டத்தில், மாநில முதல்வர்களுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று மேற்வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
‘மம்தா பானர்ஜி இன்று நம் நாட்டின் தலைவராக உருவெடுத்துள்ளார்’ – காங்கிரஸ் தலைவர் கமல் நாத்
கொரோனா இரண்டாவது அலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டக் கூட்டத்தில், பிரதமர் சர்வாதிகார போக்குடன்நடந்துகொண்டதாகவும் எல்லா மாநில முதலமைச்சர்களும் பொம்மையைப் போல நடத்தப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “அனைத்து மாநில முதலமைச்சர்களும் பொம்மைகளைப் போல நடத்தப்பட்டனர். யாருக்கும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்படியென்றால் எவ்வாறு மக்களின் கருத்தைக் கூற இயலும். நாங்கள் கொத்தடிமைகள் அல்ல; இங்குச் சர்வாதிகாரமே நடக்கிறது. நாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறோம். மாநில முதலமைச்சரின் பேச்சைக் கேட்பதைக்கூட பிரதமர் பாதுகாப்பற்றதாக உணர்கிறார் என்றால், பிரதமர் எதைக் கண்டு அஞ்சுகிறார்?” என்று மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, நீதிமன்றத்தில் முறையிடுவேன்’ – மம்தா பானர்ஜி
மேலும், இந்தக் கூட்டம்குறித்து தெரிவித்த அவர், “இங்குக் கூட்டாட்சியின் தத்துவமே பெயர்தெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிற்கு பெரிய பெரிய கட்டிடங்களையும், சிலைகளையும் கட்ட நேரமிருக்கிறது. ஆனால் மாநில முதல்வர்களின் பேச்சை கேட்க நேரமில்லை. நாடே அபாயகரமான சூழலில் உள்ளது. ஆனால் பிரதமர் இயல்பாக இருக்கிறார். இது இயல்பான மற்றும் தோல்வியடைந்த கூட்டம்” என்று மேற்வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.