Aran Sei

‘கார்பரேட்கள் லாபம் பெற அரசு தன் ஆன்மாவை விற்றுவிட்டது’ – அகில இந்திய விவசாய  சங்கம் குற்றச்சாட்டு

ரசு மட்டுமல்லாது தனியார் வியாபாரிகளும்,  விவசாய பொருட்களுக்குக்  குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி) வழங்க வழி செய்யுமாறு அகில இந்திய விவசாய சங்கம்  மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்திருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா, ”குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டப்பூர்வ உறுதி என்பது அரசாங்கத்திற்கோ அல்லது வரி செலுத்துவோருக்கோ கூடுதல் சுமையை ஏற்படுத்தாது. மாறாக, விவசாயப் பொருட்களின் வர்த்தகத்தின் மூலம் பெரும் லாபம் ஈட்டும் கார்பரேட் நிறுவனங்கள், தங்கள் லாபத்தின் சிறு பகுதியை உற்பத்தியாளர்களுக்கு வழங்க உத்திரவாதமளிக்கும்” எனக் கூறியதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பாஸ்மதி அரிசி விவசாயிகளுக்கு, கிலோவிற்கு 18 ரூபாய்  முதல் 30 ரூபாய் வரை  கிடைக்கிறது. அதானி குழுமத்தின் பார்ச்சூன் ஸ்பெஷல் பாஸ்மதி அரிசி கிலோ ரூ. 208க்கு விற்கப்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் பாஸ்மதி அரிசியை கிலோ ரூ 700 முதல் ரூ.2,200 வரை விற்கின்றன. அதிக லாபம் ஈட்டுபவர்கள் அதில் ஒரு பகுதியை உற்பத்தியாளர்களுடன் பகிர வேண்டும். நிறைய லாபம் கிடைக்கும்போது விவசாயிக்குக் கிலோவிற்கு ரூ.40 ஏன் வழங்கக் கூடாது? என மெல்லா தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது

குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கீழ் விவசாய பொருட்களை யாரும் வாங்க கூடாது என்ற சட்டத்தை  இயற்றுவதே மத்திய அரசின் வேலை என வாதிட்ட மொல்லா, “அரசாங்கமே எல்லா பொருட்களையும் வாங்க வேண்டும் என்று கூறி நாங்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை. எந்த அரசாங்கத்தாலும் அவ்வளவு பணத்தை அளிக்க முடியாது. பொது விநியோக திட்டத்திற்கு எப்படியும் தேவைப்படும் 15% அரசாங்கம் வாங்கட்டும். மீதமிருக்கும் 85% பொருட்களையும் உரிய விலைக்கு விவசாயிகளிடமிருந்து வாங்க வேண்டும்” எனக் கூறியதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

இந்தக் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்காததற்கு காரணம், “விவசாயிகளின் செலவில் கூடுதல் லாபத்தை கார்பரேட் நிறுவனங்கள்  பெறுவதற்காக, அரசாங்கம் தன் ஆன்மாவை விற்று விட்டது” என்று குற்றம்சாட்டியை மொல்லா, “இதுவரை நடைபெற்ற 10 சுற்று பேச்சுவார்த்தையிலும், ஒவ்வொரு முறையும் நாங்கள் எம்.எஸ்.பி குறித்து பேசும்போது, அரசாங்கம் பின்னர், பின்னர் எனக் கூறி வருகிறது” எனத் தெரிவித்ததாக, அச்செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘என் அம்மாவை தூக்கிலிடாதீர்கள், காப்பாற்றுங்கள்’ – குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கும் சிறுவன்

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர்கள் என்று பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை அகில இந்திய விவசாய சங்கம் மறுப்பதாகக் கூறிய மொல்லா, ”விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை  நாங்கள் விரும்பவில்லை, 94 விழுக்காடு விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச  ஆதார விலை கிடைக்கவில்லை. நாங்கள் விவசாயிகளுக்கு நன்மை தரும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். கார்பரேட்களுக்கு ஆதரவான சீர்திருத்திற்கு அல்ல” என அவர் கூறியதாக தி  இந்து கூறியுள்ளது.

 

‘கார்பரேட்கள் லாபம் பெற அரசு தன் ஆன்மாவை விற்றுவிட்டது’ – அகில இந்திய விவசாய  சங்கம் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்