நேஷனல் ஹெரால்டு-ஏஜேஎல் வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் எழுப்பிய கேள்விகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் மக்களின் குரலை முடக்குவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, ராகுல் காந்தியின் அரசியலைக் கண்டு ஒன்றிய அரசு பயப்படுவதாகவும், பொதுமக்களுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவதால் ராகுல் காந்தி குறிவைக்கப்படுகிறார் என்றும் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது கூட்டாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் பாதையில் ராகுல்காந்தி தடையாக இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்த முழுப் செயல்பாடும் (அமலாக்கத்துறை விசாரணை) சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் நடத்தும் போராட்ட அணிவகுப்பு தொடரும் என்றும், மகாத்மா காந்தியின் வாரிசுகள் நாதுராம் கோட்சேவின் வாரிசுகளுக்கு பயப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா? என்று கேள்வி எழுப்பிய அவர், “நாங்கள் காந்தியின் வழித்தோன்றல்கள் எங்கள் சத்தியாகிரகம் தொடரும்” என்று ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன்கள் முதல் தகவல் அறிக்கையின் (FIR) அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். தற்போது நடப்பது சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கூறும்போது, “பாஜகவின் கற்றறிந்த செய்தித் தொடர்பாளர்கள் தயவுசெய்து எனது கேள்விகளுக்குப் பதிலளிப்பார்களா? அமலாக்கத்துறையின் கீழ் விசாரணை செய்யுமளவு ராகுல் காந்தி செய்த குற்ற என்ன? குற்றம் தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை எங்கே என்று பதிலளிப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்
“முதல் தகவல் அறிக்கை எங்கே? தயவு செய்து முதல் தகவல் அறிக்கையின் நகலை எங்களுக்குக் காண்பிப்பீர்களா? குற்றப்பத்திரிகையும் இல்லை முதல் தகவல் அறிக்கையும் இல்லை. முதல் தகவல் அறிக்கை இல்லாமல் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Source: Thenewindianexpress
ஆளுநரா? சனாதன காவலரா? குட்டு வைத்த முரசொலி | Aransei Explainer | R N Ravi | Murasoli
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.