Aran Sei

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடல்: அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்கள் – சதீஷ் சாவன்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்படுவதனால், சிறுவர்கள் விவசாய பணிகளை நோக்கியும் சிறுமிகள் திருமணத்தை நோக்கியும் தள்ளப்படுகிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்ட்ர சட்டமேலவை உறுப்பினர் சதீஷ் சாவன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மகாராஷ்ட்ரா மாநிலத்தில், பிப்பிரவரி 15ஆம் தேதி வரை, பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு சதீஷ் சாவன் எழுதியுள்ள கடிதத்தில், “பள்ளி மற்றும் கல்லூரிகள் 50 விழுக்காடு மாணவர்களுடன் இயங்க முதலமைச்சர் அனுமதிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

‘கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்படுவதை முடிந்தவரை தவிர்க்கவும்’ – யுனிசெப் நிர்வாக இயக்குநர் வலியுறுத்தல்

“இவ்வாறு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் இடைநிற்றலால், சிறுவயதிலேயே சிறுவர்களை விவசாய பணிகளை நோக்கியும், சிறுமிகளை திருமணத்தை நோக்கியும் அவர்களின் பெற்போர்கள் தள்ளுகிறார்கள். தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டால், மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து பயிற்சியில் பெரும் பின்னடைவை சந்திக்கும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மால்கள், உணவகங்கள், தியேட்டர்கள் மட்டும் ஏன் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களோட இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சதீஷ் சாவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்ட்ராவை ஆளும் மகா விகாஸ் ஆகடி முன்னணி கூட்டணியில் சிவசேனா கட்சியுடன், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.

Source: PTI

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடல்: அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்கள் –  சதீஷ் சாவன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்