பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட ‘போதை மருந்து’ வழக்கின் பின்னணியில் உள்ள கேலிக்கூத்தை அம்பலப் படுத்தியதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக்கிற்கு சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோலாப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சஞ்சய் ராவத், ஆர்யன் கான் வழக்கின் பின்னணியில் உள்ள கேலிக்கூத்தையும் பாஜகவின் உண்மையான முகத்தையும் அம்பலப்படுத்தியதற்காக நவாப் மாலிக் பழிவாங்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
2021 அக்டோபர் 2 அன்று மும்பையின் கார்டெல்லா குரூஸ் கப்பல் விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். ஆர்யன் கானோடு சேர்த்து 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அப்போது வழக்குப் பதிவு செய்திருந்தது.
ஆர்யன்கான் விடுதலை; உண்மை எப்பொழுதும் வெல்லும் – நவாப் மாலிக்கின் மகள் கருத்து
இந்நிலையில் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி ஆர்யன் கான் உட்பட 6 பேர் மீதான வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சரான நவாப் மாலிக், அப்போதைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சமீர் வான்கடேவுக்கு எதிராக ஒரு உண்மையான பிரச்சாரத்தை அப்போது தொடங்கினார். ஷாருக்கானிடமிருந்து பணம் பறிக்க ஆர்யன் கானை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உதவியாளர்களின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கின் விசாரணை தொடர்பாக நவாப் மாலிக் கடந்த பிப்ரவரியில் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஆர்யன் வழக்கின் பின்னணியை அம்பலப்படுத்தி, அதன் மூலம் பாஜகவை அம்பலப்படுத்தியதற்காக நவாப் மாலிக் விலை கொடுத்துள்ளார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
Source : NDTV
Defamation Case போட்டு Annamalai ய Court க்கு இழுக்கனும் Vanchi Nathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.