விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்திக்காமல், கோவாவுக்கு கிளம்பிச் சென்றதால், மஹாராஷ்ட்ரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, விவசாயிகளின் கடும் அதிப்திக்கு ஆளாகியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக, டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மஹாராஷ்ட்ரா மாநில விவசாயிகள், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (24.01.21) மும்பை, ஆசாத் மைதானத்தில் கூடினர்.
ஆளுநருக்கு மூளை இருந்தால் புரிந்து கொள்வார் : உத்தவ் தாக்கரே
மஹாராட்ராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், திங்கட்கிழமை மதியம், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்ருந்ததாகவும், பேரணியின் முடிவில் அவர்களின் பிரதிநிதிகள், ஆளுநரை சந்தித்து, விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரும் மனுவை அளிக்க திட்டமிட்டிருந்ததாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பை காவல்துறையினர் பேரணிக்கு தடை விதித்த அதேநேரம், விவசாயிகளின் பிரதிநிதிகள் 20 பேர், ஆளுநர் மாளிகைக்கு சென்று மனு அளிக்க அனுமதியளித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஆளுநர் கோவா புறப்பட்டுச் சென்ற தகவலை அறிந்து விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, விசாயிகளை பார்க்காமல், கோவாவில் விடுமுறைக்கு சென்றதிலிருந்தே ஆளுநர் எதற்கு முக்கியத்துவம் தருகிறார் என்பது தெரிகிறது என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.
“மகாராஷ்டிரா ஆளுநர், பதவியின் தரத்தை சீர்குலைப்பதா?” – சரத் பவார் கேள்வி
மேலும் “அவர் முன்னாள் பாஜக உறுப்பினர் மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர் என்பதால், இது ஒன்றும் ஆச்சர்மளிக்கவில்லை” என்று ஆளுநரை, அசோக் தாவ்லே விமர்சித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் “ஆளுநரை சந்தித்து விவசாயிகள், கோரிக்கை மனுவை கொடுக்க வேண்டும். ஆனால், தற்போது உள்ள ஆளுநரைப்போல், மஹாராஷ்ட்ரா இதற்கு முன் ஒருவரை பார்த்ததில்லை. அவர் ஏற்கனவே கோவாவுக்கு சென்றுவிட்டார். இந்த ஆளுநருக்கு நடிகை கங்கனா ரணாவத்தை பார்க்க நேரம் உள்ளது, ஆனால் விவசாயிகளை பார்க்க நேரமில்லை” என்று அவர் ஆளுநரை கடுமையாக விமர்த்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவாவில் திங்கட்கிழமையன்று தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்ற. ஆளுநர் கோவா சென்றுள்ளதாகவும், 26ஆம் தேதி மும்பை திரும்பும் அவர், குடியரசுதின கொடியேற்ற நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.